Ad Widget

வடமாகாண சாலைகளின் ஆளணிப் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் – விஜயகலா

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலைகளில் நிலவிவந்த ஆளணிப் பற்றாக்குறை எதிர்வரும் ஏப்ரல் மாத முற்பகுதியில் நிவர்த்தி செய்யப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மத்திய போக்குவரத்து அமைச்சால் வடமாகாண சாலைகளுக்கு 35 பேருந்துகள் அண்மையில் வழங்கப்பட்டன. சாலைகளில் சாரதி, நடத்துநர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால், சீரான போக்குவரத்து சேவையை வழங்க முடியாது இருந்தது. இந்த ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முதற்கட்டமாக 40 சாரதிகளும் 80 நடத்துநர்களும் சேர்ந்துக்கொள்ளப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இவர்களுக்கான நியமன கடிதங்களை மத்திய போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார ஏப்ரல் மாதம் முதற்பகுதியில் கொழும்பிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் வைத்து வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Posts