Ad Widget

நாகவிகாரையில் வழிபாட்டில் ஈடுபட்ட பிரதமர்

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது விஜயத்தின் முதல் நிகழ்வாக நாகவிகாரையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வழிபாடுகளில் ஈடுபட்டார். பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர், யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். நாகவிகாரையில் நடைபெற்ற வழிபாடுகளில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்...

அரசியலுக்குள் பலியாகமாட்டேன் – சிறிதரன் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டாலும் அரசியலுக்குள் பலியாக நாங்கள் விரும்பவில்லை. இதனால், பிரதமர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளின் என்னையும் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரிக்கிறேன் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வெள்ளிக்கிழமை (27) தெரிவித்தார். யாழ். மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ள பிரதமர், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றார். அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு யாழ். மாவட்டச் செயலகம்...
Ad Widget

மகனைக் கற்க வைப்பதற்காக பரிதாபமாக உயிர் விட்ட தாய்

மகன் தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லாததால் அவனை மிரட்ட முற்பட்ட தாய் ஒருவர் பரிதாபகரமாக தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் சுன்னாகம், சூராவத்தையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த ந.சிவசோதி என்பவரே உயிரிழந்தவராவார். சிவசோதி மகனை தனியார் கல்வி நிலையத்துக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். மகனோ நகருவதாகத் தெரியவில்லை. சிவசோதி தனது உடலில்...

சிறுநீரக நோய்க்கெதிராக முற்கூட்டியே செயற்படுங்கள் – மருத்துவ நிபுணர் த.பேரானந்தராஜா

வடக்கில் ஆயிரம் பேர் வரையில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுநீரக பாதிப்புக்குள்ளாகி சுமார் 600 பேர் வரையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 120 பேர் வரையில் ரத்த சுத்திகரிப்புச் செய்யப்படுகின்றனர். வாரத்தில் 2 தடவைகள் ஒவ்வொரு வருக்கும் ரத்தச் சுத்திகரிப்புச் செய்ய வேண்டும். தவறின் ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டு நோய் தீவிரமாகிவிடும் இவ்வாறு யாழ்.போதனா...

பிரதமர் வருகையை புறகணிக்கிறது வடமாகாணசபை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் இன்று கலந்து கொள்ளும் நிகழ்வில் வடக்கு மாகாண சபையினர் பங்கேற்க மாட்டார்கள் என்று நம்பகரமாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாண முதலமைச்சருக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதையடுத்து வடக்கு மாகாணசபையினர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர் என்று தெரியவருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணத்திற்கு இன்று...

யாழில் பிரதமர் தலைமையில் கர்ப்பிணிதாய்மாருக்கு போசாக்கு திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டத்தில் குறைநிறை பிள்ளை பிறப்பை இலங்கையில் இருந்து இல்லாது ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபா 2000 பெறுமதியான போசாக்கு பொதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்...

ஜனாதிபதியின் சகோதரர் மீது தாக்குதல்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன மீது இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட தாக்குதலால் படுகாயடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை பொலனறுவையில் இடம்பெற்றுள்ளது. கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட அவர் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் எனவும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்...

மினிபஸ் – ஓட்டோ விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

வல்லைவெளிப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பருத்தித்துறையிலிருந்து வந்த ஓட்டோ முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது யாழ்ப்பாணத்திலிருந்த சென்ற மினிபஸ்ஸுடன் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது. ஓட்டோவில் பயணித்த ர.அஜந்தன் (வயது 13) என்பவர் உயிரிழந்தார். மு.ஜனார்த்தனன் (வயது 26) என்பவர் ஆபத்தான நிலையில்...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் காயம்!

மாங்குளம் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது;- மாங்குளம், ஐயன்குளம் பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமான இளைஞன் ஒருவனை சோதனையிட்டபோது அவரது பையில் கஞ்சா இருந்துள்ளது. இதனையடுத்து அந்த இளைஞனை கைது...

எனது விடுதலைக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி – விபூசிகா

என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், வியாழக்கிழமை(26) அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தபோதே விபூசிகா இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், எனது அம்மாவை...

இன்று யாழ். வருகின்றார் பிரதமர்

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை (27) விஜயம் செய்யவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை மாவட்டச் செயலகத்தில் வைத்து சந்திக்கவுள்ள பிரதமர், அவர்களின் குறைகள் மற்றும் பிரச்சினைகள்...

கதிர்காமர் கொலை வழக்கு: 2 பொலிஸாருக்கு அழைப்பு

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளிப்பதற்கு வருமாறு இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது. இளைப்பாரிய பிரதி பொலிஸ் மா அதிபர் ஜே.ஆர். ஜயவர்த்தன, பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சரத் லூகொட ஆகியோர் மார்ச் 31ஆம் திகதியன்று சாட்சியமளிக்க வருமாறு நீதிமன்றம் அழைத்துள்ளது. இந்த...

இலங்கை – சீனாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்களும் கைச்சாத்து

வலயத்தில் முக்கியமானதொரு இராஜதந்திர முக்கியஸ்தானத்தை இலங்கைக்கு எப்போதும் வழங்கத் தயாராக உள்ளதாக சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று வியாழக்கிழமை (26) உறுதியளித்தார். சீனாவுக்கான நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை (26) இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது....

இலங்கை பணிப்பெண்கள் இருவரின் சடலங்கள் சவுதியில் மீட்பு

சவுதி அரேபியாவின்அஸீர் பிரதேசத்தில் பணிப்பெண்களாக சேவையாற்றுவதற்கு சென்றிருந்த இலங்கை பணிப்பெண்கள் இருவர் மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்தி தெரிவிக்கின்றது. இவ்விருவரில் ஒருவர் விபத்திலும் மற்றவர் எரியூட்டப்பட்ட நிலையிலும் மரணமடைந்துள்ளனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் திருகோணமலை உப்புவேலியை வசிப்பிடமாக நசுரா என்றும் அவர் ஐந்து பிள்ளைகளின் தாயாவார்.ஆறு மாதங்களுக்கு முன்னரே பணிப்பெண்ணாக அவர் சவுதிக்கு சென்றுள்ளார்....

மூன்றாகப் பிளந்தது சு.க

புதிய எதிர்க்கட்சித் தலைவரொருவரின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள தேசிய அமைப்புக்களின் ஒன்றியம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்றாகப் பிளந்துள்ளது என சுட்டிக்காட்டியது. கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (26) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது உரையாற்றிய தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் அமைப்பாளர் குணதாச அமரசேகர, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய...

‘ஜெர்மன்விங்ஸ் விமானம் இரண்டாம் விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது ‘

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி " வேண்டுமென்றே விமானத்தை அழிக்க" விரும்பியதாக பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். [caption id="attachment_42430" align="aligncenter" width="625"] டுவிட்டரில் இருந்து எடுக்கப்பட்ட இரண்டாம் விமானி அந்த்ரேயாஸ் லுபிட்ஸ் புகைப்படம். படம் உறுதிசெய்யப்படவில்லை. [/caption] கீழே விழுந்த விமானத்தின் விமானியறை ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைக்கப்பெற்ற...

வவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு 2ஆம் மாடியில் இருந்து அழைப்பு

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கி. தேவராசாவை இரண்டாம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பொலிஸார் ஊடாக இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 10மணிக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும்...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஞாயிறு விடுமுறை வேண்டும்

ஆலயங்கள் தோறும் அறநெறிப்பாடசாலை வகுப்புக்களை நடத்தவதற்கு ஏதுவாக தனியார் கல்வி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட வேண்டும் என யாழ். சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரி ஜாக்கிராத் சைதன்ய சுவாமிகள் தெரிவித்தார். வரலாற்றுச்சிறப்பு மிக்க 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுன்னாகம் தாழையம்பதி அரிகர புத்திர ஐயனார் தேவஸ்தானத்தின் 'தாழையம்பதியான் இசைத்தமிழ்' இசைப்பேழை இறுவெட்டு...

திருமண பதிவுக் கட்டணக் குறைப்பு அமுல்

அரசாங்கத்தால் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவிக்கப்பட்ட திருமணப் பதிவு கட்டணக் குறைப்பு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக வட மாகாண உதவிப் பதிவாளர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் புதன்கிழமை (25) தெரிவித்துள்ளார். முன்பு வீட்டுக்கு வந்து திருமணப் பதிவு செய்ய 3,500 ரூபாய் கட்டணம் அறவிடப்பட்டது. தற்போது அக்கட்டணம் 50 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. திருமணப் பதிவாளருக்கு 1500...

இலங்கை கடும் சவால்களை எதிர்கொள்ள நேரும் – அமெரிக்கா

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னைய ஜனாதிபதியின் தீங்குமிக்க கொள்கையிலிருந்து நாட்டை விலக்கிச் செல்கின்ற போதும் முன்னைய அரசாங்கம் விட்டுச் சென்ற நிதி சிக்கல் உட்பட பல கடுமையான சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடுமென அமெரிக்கா கூறியுள்ளது. 'இலங்கை மக்களும் சிறிசேன அரசாங்கமும் இனிவரும் மாதங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆயினும், இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதில்...
Loading posts...

All posts loaded

No more posts