Ad Widget

எமது மக்களின் பிரச்சினைக்களுக்கு விரைவில் தீர்வு காண ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம் – அங்கஜன்

எமது மக்களின் அன்றாட மற்றும் நிரந்தர பிரச்சினைகளிற்கு தீர்வு காண ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கரங்களை பலப்படுத்த நாம் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் எமது வளமான எதிர்காலத்தை அடைய முடியுமென ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதான வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்க்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவிற்கு வாக்களித்ததன் மூலம் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அதன் பின்னர் எமது மக்களிற்கு பல நன்மைகள் கிடைத்துள்ளன.

உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எமது மாகாணசபை சுயமாக இயங்க புதிய ஆளுநர் மற்றும் புதிய பிரதம செயலாளர் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் மாகாணசபை சுயமாக இயங்குவதற்கு எமது ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா வழி வகுத்துள்ளார். எமது வடமாகாண முதலமைச்சர் கேட்டதற்கிணங்க முதலமைச்சர் நிதியத்தினை ஆரம்பிக்க ஜனாதிபதி முன் வந்துள்ளார்.

இந்தவகையிலே சிறுபான்மை மக்களிற்கு பல நன்மைகள் செய்வதற்கு எமது ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அந்த வகையில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த என்னை ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராக்கி சிறுபான்மை மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினை குறித்து கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் ஆராயப்பட வேண்டும் என்பதற்காகவே என்னை நியமித்தார்.

இதன் மூலம் எவ்வளவு தூரம் ஜனாதிபதி உங்கள் பிரச்சினைகள் குறித்து மிகவும் அக்கறையாக உள்ளார். ஏன்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலமே ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்த முடியும். அந்த வகையில் உங்களின் பிரதிநிதியாக நான் நின்று உங்களின் பிரச்சினையை ஜனாதிபதிக்கு கூறி அருகில் இருந்து பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண ஒரு வாய்ப்பை தாருங்கள் என அங்கஜன் இராமநாதன் கேட்டுக் கொண்டார்.

Related Posts