Ad Widget

அரச அதிகாரிகளுக்கு புலமைப்பரிசில் வழங்க சீன அரசு தயார்!

இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளின் பட்டமேற்படிப்புக்களுக்கும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பயிற்சி நெறிகளுக்கும் புலமைப்பரிசில்களை வழங்க சீன அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

china-govent-gov

த ஹஸ்ட் பல்கலைக்கழகத்தின் (The HUST (Huazhong University of Science and Technology) ) பேராசிரியர் சூ ஷியாலியான் ( prof.Xu Xiaolin) உட்பட பேராசிரியர் சென் கீ (Prof.Chen He), பேராசிரியர் சென் ஷிகிஸ்கா (Prof Chen Zhixia) குழுவினருடன் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிருவாகத்தின் SLIDA (Sri Lanka Institute of Development Administration) சிரேஷ்ட அலுவலர்கள் பங்குபற்றி இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து வௌியிட்ட அவர் சீனாவில் புகழ்மிக்கதுமான பல துறைகளில் திறமையான மாணவர்களை உருவாக்கி வரும் HUST பல்கலைக்கழகம் இலங்கை அபவிருத்தி நிர்வாக நிருவாகத்துடன் பல வருடங்களாக பரஸ்பர நட்புறவினை பேணி வருகின்றது. இந்த நட்புறவினை பரஸ்பர தொடர்பினை மேலும் பலப்படுத்தும் விதமாக இந்நிறுவன அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான பட்ட மேற்படிப்பு நிகழ்ச்சித் திட்டங்களையும் பயிற்சி நெறிகளையும் வழங்க சீனாவின் HUST பல்கலைக்கழகம் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது.

அவ்வகையில் பட்டமேற்படிப்பு நிகழ்ச்சித்திட்டமொன்றினை (Master in Public Management (MPM) degree programme) கிராமிய அபிவிருத்தி மற்றும் இ- அரசாங்கம் ( Rural development and E – government) என்ற துறையில் முன்னெடுக்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வௌிநாட்டு பயிற்சி நெறியொன்றினையும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில் 30 அபிவிருத்தி நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் அடங்கிய ஒவ்வொரு குழு வீதம் தெரிவு செய்யப்பட்டு சீனாவுக்கு இரண்டு வார பயிற்சி நெறிக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளனர். அவ்வகையில் இவ்வருடத்தில் ஒரு குழுவும் எதிர்வரும் ஆண்டில் இரண்டு குழுக்களும் செல்ல ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இவ்வாறான பயிற்சி நெறிகளையும் கற்கை நெறிகளையும் HUST பல்கலைக்கழகத்தினுடாக இலங்கை அரச சேவையாளர்களுக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள சீன அரசாங்கத்தினையும் குறிப்பிட்ட பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts