Ad Widget

“மின்னல்” நிகழ்சி நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் பொதுச் செயலாளருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் இன்று தடை விதிக்கப்பட்டது. மின்னல் நிகழ்ச்சி நடத்தும் ஸ்ரீ ரங்கா , திரைக்குப் பின்னால் பேசும் பல விடையங்களை இணையத்தளங்கள் சமீபத்தில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததை அனைவரும் அறிவீர்கள்.

மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீடினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து பாராளுமன்றத் தேர்தல் காலப் பகுதியில் குறித்த நிகழ்ச்சியினை சக்தி டி.வியில் ஒளிபரப்ப முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளரும், அரசியல் கட்சியொன்றினால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவருமான ஜே. ஸ்ரீ ரங்காவினால் எவ்வாறு மின்னல் அரசியல் நிகழ்ச்சியினை நடத்த முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

எவ்வாறாயினும், குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதனை பாராளுமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டார்.

அத்துடன் இன்றிலிருந்து புதிதாக எந்தவொரு மின்னல் நிகழ்ச்சியினையும் புதிதாக பதிவுசெய்ய முடியாது எனவும் தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டார். ஜே. ஸ்ரீ ரங்காவினால் சக்தி டி.வியில் நடத்தப்படும் மின்னல் அரசியல் நிகழ்ச்சிக்கு சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts