Ad Widget

கணித விஞ்ஞான வள நிலையம் உருவாக்கப்பட்டமை சிறந்த செயற்பாடு

கிளிநொச்சி நகரில் கணித, விஞ்ஞான வள நிலையம் உருவாக்கப்பட்டுள்ளமை சிறந்த செயற்பாடு என மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஷ்வரன் தெரிவித்தார்.

rubavathy-Katheeswaran

கிளிநொச்சி, திருநகர் வடக்கில் அமைக்கப்பட்ட கணித, விஞ்ஞான வள நிலையத்தை சனிக்கிழமை (21) திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்.

இந்த வளநிலையத்தினூடாக பிள்ளைகள் தங்களை வளப்படுத்துவதற்கான சேவைகள் வழங்கப்படவிருப்பது பெரும் கொடையாகும். எமது மாவட்டம் மீள்குடியேற்றத்தின் பின்னர் புது பரிணாமத்தை அடைந்திருக்கின்றது.

மாணவர்களின் அறிவு விருத்தியை மேம்படுத்தவும் கலைசார்பான விடயங்களை மேம்படுத்துவதும் முக்கியமானதாகும்.

கணித, விஞ்ஞான வள நிலையம் திறந்து வைக்கப்பட்டிருப்பது, அதனுடாக பயிற்சிகள் வழங்கப்படவிருப்பதும் அதனுடாக மாணவர்களின் கல்வியறிவு மேம்படுத்தப்படவிருப்பதும் சிறப்பானதாகும்.

தற்போது நாம் கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். கணினியின் ஊடாக பல்வேறு விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது. நல்ல விடயங்களையும் தேவையற்ற விடயங்களையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எமது பிள்ளைகளை தவறான வழியில் இட்டுச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. கலை சார்ந்த விடயங்களை சமூகத்திலே புறந்தள்ளி செல்கின்ற செயற்பாடு காணப்படுகின்றது. அவற்றை மீளவும் கொண்டு வருவதற்கு இவ்வாறான வள நிலையங்கள் அவசியமானது’ என தெரிவித்தார்.

Related Posts