Ad Widget

இரு மொழிகளிலும் தேசிய கீதம்

வளலாயில் நடைபெற்ற பொதுமக்களுக்கான காணிகள் வழங்கும் நிகழ்வில் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் ஒரே நேரத்தில் இசைக்கப்பட்டது.

வளலாய், வசாவிளான் பகுதியிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திங்கட்கிழமை (23) வளலாய் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதம் பாடப்பட்டது.

தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பில் அரசாங்கத்தில் இணக்கப்பாடு காணப்பட்டுள்ள போதும், சிலர் அதனை ஏற்க மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றிய இந்நிகழ்வில் இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts