Ad Widget

யாழில் கடையடைப்பு போராட்டம்

புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி  படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (19) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மாணவியின் கொலைக்கு நீதி வேண்டுமென கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்கள் இணைந்து கஸ்தூரியார் வீதிச் சந்தியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற மாணவி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையுடன் தொடர்புடைய 8...

பயங்கரவாதம் தலைத்தூக்க இடமளியேன் – ஜனாதிபதி

பயங்கரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளியேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போருக்கு பின்னரான காலத்தில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பௌதீக வளங்களை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மாத்தறையில் நடைபெற்ற 6ஆவது வெற்றிவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவருவதற்காக முன்னின்று உழைத்த...
Ad Widget

புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள் மூவரின் வீடுகள் பொதுமக்களால் எரிப்பு!

பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ள புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மூவரின் வீடுகள் பொதுமக்களால் எரிக்கப்பட்டது. நேற்று திங்கட்கிழமை மாலை புங்குடுதீவுப் பகுதியில் உள்ள சந்தேகநபர்களின் வீடுகளே பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டன. வீட்டில் இருந்தவர்களை வெளியேறிச் செல்லுமாறு கூறிய பொதுமக்கள் அவர்களில் வெளியேறியதும் வீடுகளை தீயிட்டுக் கொழுத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் சுவிஸிலிருந்து வந்த சந்தேகநபர் தங்கியிருந்த வீடும் மற்றும்...

முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை! தற்காலிகப் பின்னடைவையே சந்தித்துள்ளோம்!!

முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை. அது தற்காலிகப் பின்னடைவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகளை சந்தித்து அவர்களுடன், இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்விலேயே...

மாணவி கொலை – குற்றவாளிகளுக்கு சாவுத் தண்டனை வழங்கக் கோரி பகிஸ்கரிப்புக்கு அழைப்பு!

புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்யா கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு சாவுத் தண்டனை வழங்கக் கோரியும் வடமாகாணம் முழுவதும் பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடகச் செய்தியில், காலம் காலமாக எமது உறவுகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதும்,...

நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 88 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பெண் கொலையுடன் தொடர்புடைய இருவருக்கு விளக்கமறியல்

பொன்னாலை வீதி கொத்தாத்துறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி, ஞாயிற்றுக்கிழமை (17) உத்தரவிட்டார். வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயிலடியை சேர்ந்த பாலசுப்பிரமானியம் யோகேஸ்வரி (வயது 34)...

உண்மைகளை சர்வதேசத்துக்கு கொண்டு வரவே தமிழர்கள் நீதியை கோருகின்றனர்

போரின் போது உயிரிழந்த பொதுமக்களுக்கான நீதியைத் தமிழ்த்தரப்பு வேண்டி நிற்பதன் நோக்கம் வெறுமனே குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இது தொடர்பில் வெளிக்கொணரப்படுகின்ற உண்மைகள், தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்த உதவும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினம், திங்கட்கிழமை (18)...

மே18 நினைவு நிகழ்வுகள்

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட உறவுகளுக்கான கிரிகைகள்! 2009 ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதிமுள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட அனைத்து ஜீவஆண்மாக்களிற்காகவும் சாந்திகிரிகைகள் இன்று கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வடமாகாண ஐக்கியதேசியகட்சியின் அமைப்பாளர் திரு.துவாரகேஸ்வரனின் ஏற்பாட்டில் மிக அமைதியானமுறையிலே நடைபெற்றது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீவி விக்கினேஸ்வரன் அவர்களும் வடமாகாண...

வவுனியாவிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு பகுதியில் கூட்டு வன்புனர்வின் மூலம் படுகொலை செய்யப்பட்ட 18 வயது மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் ஒரு மணிநேரம் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன் ஒன்று கூடிய மாணவர்களும் ஆசிரியர்களும் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், 'அரசாங்கமே...

உறவுகளை அஞ்சலிக்கக் கூடிய மக்களின் கண்ணீரால் தோய்ந்தது முள்ளிவாய்க்கால்!

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறுகிறது. இந்நிலையில், மே 12 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்...

மூன்று தினங்களுக்கு சீரற்ற காலநிலை தொடரும்

இடை அயன ஒடுங்கல் வலயம், வடக்கு பகுதிக்கு மேல் காணப்படுவதால் தற்போது மழை வீழ்ச்சி காணப்படுகின்றது. இது தற்போது நாட்டை கடந்து செல்வதால் தொடர்ந்து மூன்று தினங்கள் இவ்வாறு சீரற்ற காலநிலை தொடரும் என்று திருநெல்வேலி பிராந்திய வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி டி.பிரதீபன் நேற்றய தினம் தெரிவித்தார். இடை அயன ஒடுங்கல் வலயமானது தற்போது...

கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களது உறவினர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி கீரிமலையில் பிதிர்க்கடன் செய்வதற்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். பிதிர்க்கடன் நிறைவேற்றுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை. அது...

பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றச்செயல்கள் இடம்பெற ஏதுவாக அமைகின்றன! வடக்கு முதலமைச்சர் குற்றச்சாட்டு!!

போர் முடிந்த பின்னர் சட்டத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகத் தென்படுகிறது. சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைந்து விடுகின்றன. - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். புங்குடுதீவில் உயர்தர மாணவி வித்தியா வன்புணர்வுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

தமிழருக்கு இன்று தேசிய துக்க நாள்! சுடர் ஏற்றி எமது உறவுகளை அஞ்சலிப்போம்!!

"இன்று மே 18ஆம் திகதி. இன்றைய நாள் தமிழரின் தேசிய துக்க நாளாகும் - போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட நாளாகும் - இழந்த எமது உறவுகளுக்கு சுடர் ஏற்றி - அஞ்சலி செலுத்தி நினைவுகூரும் நாளாகும். எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் இதனைச் செய்வோமாக.'' - இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தரணியெங்கும் உணர்வெழுச்சியுடன் இன்று!

இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த நாள் (மே 18) இன்றாகும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில்...

புங்குடுதீவு மாணவி மரணம்: மேலும் ஐவர் கைதால் பதற்றம்

புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும் என்றும், ஆகவே அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்றும் புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி...

வன்புணர்வுகளுக்கெதிராக இளையவர்கள் போராட்டம்! நல்லுாரில் திரண்டனர்

த.தே.ம.மு ஏற்பாடு செய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு தடை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் குறித்த நினைவு தினத்தை நடத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அன்றையதினம் அதே பகுதியில் நினைவு தினத்தை நடத்தவுள்ளதால் இரு கட்சிகளுக்குள்ளும் முரண்பாடு ஏற்படலாம் என...

இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிரார்த்தனைகள்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலை புனித தீர்த்தக்கரையில் உள்ள குழந்தைவேல் சுவாமிகள் ஆலயத்தில் 17, 18, மற்றும் 19 ஆகிய திகதிகளில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை சைவ மகா சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சைவ மகா சபையால் வெள்ளிக்கிழமை (15) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த...
Loading posts...

All posts loaded

No more posts