- Monday
- September 22nd, 2025

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காததால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வவுனியா, பண்டாரிக்குளம், விபுலானந்தா வித்தியாலயத்தைச் சேர்ந்த 19 வயது மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலைக்கான காரணத்தை கடிதமொன்றில் எழுதிவைத்துவிட்டே அம்மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என...

அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாவச்சேரி நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைவாக நேற்று (06-08-2015) சாவச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார். 31-07-215 அன்று சாவகச்சேரி பகுதிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு 25 பேர் கொண்ட குழு சென்ற வேளை அவர்களில் சிலரை பொலிஸார்...

சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அலுவலக ரயிலில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த சஞ்சீவ ரணசிங்க என்பவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ரயில் திணைக்கள ஊழியர் என்றும் அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...

யாழ்.மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பில் 90 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் அலுவலகத்தின் உத்தியோகப்பூர்வ தகல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்கள் மற்றும் ஏனைய கண்காணிப்பு அமைப்பாளர்களின் காண்காணிப்புடன் எந்தவிதமான குழப்பங்களும் இல்லாமல் அமைதியான முறையில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளது என்றும் அலுவலகத் தகவல்கள்...

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதாகவும், கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் அருளப்பு யோசப் எட்வேர்ட் தெரிவித்தார். கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்...

இந்து மக்களின் வரலாற்றுப் மகிமை வாய்ந்த கீரிமலைக் கேணி அழிவடையும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை உடனடியாக திருத்தி அதனுடைய வரலாற்றையும் மற்றும் இந்து கலாசார மரபுகளையும் காப்பாற்ற வேண்டிய அவசியமும் தேவையும் தற்போது எழுந்துள்ளது. சுனாமி அனர்த்தத்தினால் கீரிமலைக் கேணியும் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வேளையில் கேணியின் சுவர்கள் உடைந்து சேதமடைந்ததுடன் கேணியின்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு திடீரெனப் புகுந்து கலகம் விளைவிக்க நினைத்த வேறு கட்சியின் உறுப்பினர்களை மக்கள் விரட்டியடித்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நேற்றைய தினம் வேட்பாளர் சித்தார்த்தனுக்கு ஆதரவாக புங்குடுதீவில் பிரச்சாரம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அங்கே வந்த...

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தால் உசன் கிராமத்தில் நடத்தப்பட்டு வரும் பொது நூலகத்தை நவீன முறையில் தரமுயர்த்தும் நோக்கில் இன்றைய தினம் உசன் கிராம மக்களுக்கு இலவச Internet WiFi சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலகுவாக புத்தகங்களை வாசிக்கக் கூடியதாக “I book” சலுகை வழங்கும் முகமாகவும் சிறுவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கக்...

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரில் நீண்ட காலமாக நிலவி வரும் நிரந்திர அதிபர் விடயத்தை வலியுறுத்தி யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 7 .30 மணியளவில் நடைபெற்றது. இதன் போது போராட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்தி தங்களிற்கான நிரந்திர அதிபர் விடயத்தை வலியுறுத்தினர். ஆனால்...

மன்னார் – மாந்தை மேற்கு – இலுப்பக்கடவை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட – கோவில்குளம் கிரமப் பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சந்தேகநபர் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரின் வாக்குமூலத்தின் பிரகாரம், அப்பெண்ணின் கணவன் வெளிநாட்டுக்குச் சென்றதும் , மேற்படி இருவரும் கள்ளத்தொடர்பை பேணி வந்துள்ளதுடன் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர்...

பிரிட்டனின் சனல் 4 ஊடகத்தின் கெலம் மக்ரே மற்றுமொரு போலி அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்துள்ளதாக, சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. 30 ஆண்டுகளாக நீடித்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரச படையினர் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்துள்ளதாக போலியான அறிக்கை ஒன்றை மக்ரே சமர்ப்பித்துள்ளார். கடந்த 5ம் திகதி இந்த...

தான் ஒருபோதும் தமிழ்ஈழக் கோரிக்கையை ஆதரிக்கவில்லையென்றும், எதிர்காலத்திலும் அதனை ஆதரிக்கப் போவதில்லையென்றும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் ஈழம் வரைபடத்தைக் கொண்டதான எனது தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த 65-9815 என்ற இலக்கத்தகடு உடைய வாகனத்தை பயன்படுத்தியதாக தனக்கு எதிராக தேர்தல்கள் செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும்...

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதகாலமாக...

இறுதிக்கட்டப்போரின்போது வெள்ளைக்கொடியுடன் படையினரிடம் சரணடைய வந்தவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், போர்க்களத்தில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் ஆகியன போர்விதிமுறைகளை மீறும் செயல்களாகும். எனவே, போர் முன்னெடுப்பு என்ற போர்வையில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சார்பாக அரசு ஒருபோதும் நிற்காது - இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான பொறிமுறை உருவாக்கும் கலந்துரையாடல்களில், வடக்கு மாகாணசபையும் உள்ளடக்கப்படுவது கட்டாயம்' என்று ஐக்கிய நாடுகள் சபை நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் மீண்டும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு கேட்டுக்கொண்டதற்கு அமைய, எல்லாப் பங்காளர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தி, பரந்தளவிலான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க ஐ.நா. முன்வந்தது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த...

பொதுத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் யாவும் எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைவதால் சகல கட்சிகளின் தேர்தல் காரியாலயங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பிரசாரப் பலகைகள் யாவும் 15ஆம் திகதி காலை 8 மணிக்கு முன்னர் அகற்றப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல கட்சிகளின் செயலாளர்களுக்கும் அறிவித்தலொன்றை...

மிருசுவில் பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறிய அறுவருக்கு சாவகச்சேரி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மிருசுவில் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு 09.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை தம்வசம் வைத்திருந்த 6 பேரை கொடிகாமம் பொலிஸார் கைதுசெய்திருந்தனர். அவர்களிடமிருந்து 285 சுவரேட்டிகள், ஒட்டுப் பசை மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். இதனையடுத்து...

புதிதாக எந்த அரசாங்கம் உருவாகினாலும் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எந்த அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்தாலும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளக விசாரணைக்கா,...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில்...

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கொள்கை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலின் பின்னர் ஜனநாயகப் போராளிகள் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

All posts loaded
No more posts