Ad Widget

வீதி விபத்துக்களால் ஏற்படும் அங்கவீனங்கள் அதிகரித்து வரும் அபாயம்

வீதி விபத்துக்களில் சிக்குண்டு அங்கவீனமாவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

கடந்த 1987 ஆம் ஆண்ட முதல்; 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்;ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 6 ஆயிரத்து 524 பேருக்கு செயற்கைக் கால்களும், 267 செயற்கை கைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

மிதிவெடியில் சிக்கி 3135 பேரும் ஷெல் வீச்சுக்களில் 1157 பேரும், நீரிழிவு நோயாளிகள் 581 பேரும் குண்டு வெடிப்புக்களில் அகப்பட்ட 474 பேரும் துப்பாக்கிச்சூட்டில் அகப்பட்ட 293 பேரும் வீதி விபத்துக்களின் போது 366 பேரும் ஏனைய விடயங்களில் 518 பேரும் கால்களை இழந்து செயற்கை கால்களை பொருத்தியுள்ளனர்

இவ்வாறு அவயங்கள் பொருத்தப்பட்டவர்களில் அதிகமானவர்கள் 20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்களாவர்;. அங்கவீனமானமடைபவர்களுக்கான செயற்கை உறுப்புக்களை ஜெய்ப்பூர் நிறுவனம் வழங்கி வருகின்றது.

தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளமையால், யுத்தத்தால் ஏற்பட்ட அங்கவீனங்கள் குறைவடைந்துள்ளது. ஆனால் வீதி விபத்துக்களால் ஏற்படும் அங்கவீனங்கள் அதிகரித்து வரும் அபாயம் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts