Ad Widget

தமிழருக்கான தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம்! – சம்பந்தன்

புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய அரசானது நிலையான அரசியல் தீர்வொன்றை வழங்க விரைவான செயற்பாடுகளில் இறங்குமென்று நாம் நம்புகின்றோம். ஜனாதிபதி அந்தக் கைங்கரியத்தில் பின்நிற்கமாட்டார் என்றும் நம்புகின்றோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று கிடைக்கும்வரை அமைச்சுப் பதவிகளையோ, வேறு எந்தப் பதவிகளையோ பெறப்போவதில்லை என்பதில் நாம் உறுதியுடையவர்களாக இருக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்திருக்கும் ஆணையென்பது மக்கள் எம்மீது வைத்திருக்கும் உயர்ந்த நம்பிக்கையைக் காட்டுகின்றது.

எம்மை மீண்டும் தமது ஏகப் பிரதிநிதிகளாக நிரூபித்துள்ள தமிழ் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுடைய நம்பிக்கைக்கும் – விசுவாசத்திற்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் குந்தகம் விளைவிக்கமாட்டோம். வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் மூன்றாம் நிலை பலம் பொருந்திய கட்சியாக வெற்றிவாகை சூடவைத்த மக்களுக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம்” – என்றார்

Related Posts