தேசிய அரசில் ஈ.பி.டி.பியையும் சேருங்கள்! ஜனாதிபதியிடம் டக்ளஸ் கோரிக்கை!!

தேசிய அரசாங்கத்துடன் ஈ.பி.டி.பியையும் சேர்க்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே டக்ளஸ் தேவானந்தா இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

இதே கோரிக்கையை ரணில் விக்கிரமசிங்கவிடமும் அவர் விடுத்திருந்தார் எனத் தெரிய வருகின்றது. எனினும் ஜனாதிபதியை டக்ளஸ் சந்தித்தமையை மாத்திரம் ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர் உறுதிப்படுத்தினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை வகித்த கூட்டணியின் ஆட்சிக் காலங்களில் ஈ.பி.டி.பி. இணைந்திருந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தது.

கடந்த தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்றிருந்த அக்கட்சி இப்போது ஒரு ஆசனத்தை மட்டுமே பெற்றுள்ளது. இதுதவிர ‘100 நாள் திட்ட’ அரசின் காலத்திலும் தனது கட்சியைச் சேர்க்க அவர் பல முயற்சிகள் எடுத்திருந்தார். ஆனால் ஜனாதிபதி மைத்திரியோ, பிரதமர் ரணிலோ அவரை இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts