- Saturday
- September 26th, 2026
நாங்கள் “நிலத்தில் எண்ணை, எண்ணை” என்று சில காலத்திற்கு முன்னர் கூக்குரல் இட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் எமக்கு நீரின் பாதிப்பு எண்ணையில் இருந்து வருவதிலும் பார்க்க பல மடங்கு அதிகமாக அசேதனப் பசளைப் பாதிப்பால் வருவது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாகப் புகையிலைப் பயிர் செய்வோர் தீவிர அசேதனப் பசளைப் பாவிப்பால் நிலத்தடி நீரை வெகுவாகப் பாதிப்படையச்...
இந்திய தூதரக ஏற்பாட்டில் யாழ் இந்துக்கல்லுாரியில் இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தலைமையில் சர்வதேச அகிம்சை தினம் நடைபெற்றுள்ளது. சபாலிங்கம் அரங்கில் இந்த நிகழ்வுஇடம்பெற்றது விழாவுக்கு சிறப்பு விருந்தினராக இலங்கை எதிர்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் அவர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் வடக்கு மாகாண சபை...
யாழ்.இந்து கல்லூரி மாணவன் ஒருவர் கல்லூரிக்கு அருகில் உள்ள ஆட்களற்ற வீடொன்றில் இருந்து கை மணிக்கட்டில் வெட்டுக்காயத்துடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கச்சேரி நல்லூர் வீதியை சேர்ந்த 14 வயது மாணவனே அவ்வாறு மீட்கப்பட்டு உள்ளான். மாணவன் மீட்கப்பட்ட வீட்டு கிணற்றில் இருந்து மாணவனின் பாடசாலை பை (bag) மீட்கப்பட்டு உள்ளது....
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் செயலணிக்குழுவினருக்கும் வடமாகாண சபைச் செயலணிக் குழுவினருக்குமிடையே நேற்றயதினம் காலை 11.00 மணிக்கு வடமாகாண சபையில் கலந்துரையாடல் இடம் பெற்றது. இது தொடர்பில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது சார்பில் 15 உறுப்பினர்களும் வடமாகாண செயலணிக்குழுவில் வடமாகாண அவைத்தலைவர், வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர், மாகாணசபை...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால், குறித்த போராட்டம் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும்,...
விஜய் நடித்து நேற்று வியாழக்கிழமை (01) வெளியிடப்பட்ட புலி படத்தை மொக்கைப்படம் எனக்கூறியரை, விஜயின் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் யாழ். ராஜா திரையரங்கில் இடம்பெற்றுள்ளது. தாவடியிலிருந்து வருகை தந்த இளைஞர் குழு, நேற்று (01) படத்தைப் பார்வையிட்ட பின்னர், அந்தக் குழுவில் இருந்த ஒருவர் 'புலி படம்...
19 வயது இளைஞரை காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.புங்கன்குளம் பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் தனஞ்சயன் (வயது 19) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். கடந்த 28 அம் திகதி இரவு 8 மணியளவில் யாழ். நகரப்பகுதிக்கு போய் வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். எனினும்...
ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் "போர்க்களத்தில் ஒரு பூ" என்ற தமிழ்ப்படம் திரையிடப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஊடக பிரிவைச் சேர்ந்த இசைப்பிரியா என்ற இளம்பெண், இறுதிக்கட்ட போரின் போது இலங்கை ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழீழ பத்திரிகையாளர்...
சீனி, உப்பு, எண்ணெய் ஆகியவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மது, சிகரட் பாவனையால் நோய்களுக்கு இலக்காகுபவர்களின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் பல இலட்சம் ரூபாய்க்களை செலவு செய்ய வேண்டியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். கிருலப்பனையிலுள்ள அரசாங்க...
மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் குறுகிய கால பயிற்சிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஏழு மாதங்களுக்கு நடைபெறும் இப்பயிற்சிகளில் தேசிய தொழிற் சான்றிதழ் (என்.வி.கியூ) கற்கை நெறிகளான கடற்துறை வெல்டிங் தொழில்நுட்பவியலாளர், கடற் சுழியோடிகள், சமுத்திரவியல் இயந்திர தொழில்நுட்பவியலாளர், வெளிப்புறத்தில் பொருத்தும் என்ஜின் தொழில்நுட்பவியலாளர், கடற்தொழில் தொழில்நுட்பவியலாளர், கப்பல் தலைமைத்துவத்துக்கான பயிற்சி ஆகியன 6 மாதங்களைக் கொண்டதாக நடைபெறுகின்றன....
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணியமை மற்றும் அவ் அமைப்புடன் இணைந்து செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய புனர்வாழ்வு பெற்று வந்த கிராம அலுவலர்கள் உள்ளிட்ட 20 பேர் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி,...
யாழ்ப்பாணத்தில் வித்தியாவுக்கு எதிரான அநீதி முதல் கொடதெனியாவ சேயா வரையிலான, துயரமாக கொடூரச் சம்பவங்கள் சிறுவர் மீது திணக்கப்பட்ட அடக்குமுறை, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சமூக ரீதியான ஏனைய பாதிப்புக்கள் காரணமாக முழு நாடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற சர்வதேச சிறுவர்...
உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ். அரிமாக்கழகத்தின் அனுசரணையுடனும் யாழ்.போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடனும், யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் பார்வைக் குறைபாடுடைய தனது பயனாளிகளுக்கு கண் பரிசோதனைகளை மேற்கொண்டு இலவசமாக மூக்குக் கண்ணாடி வழங்கவுள்ளது. மேற்படி சிகிச்சை முகாமில் பங்கு கொண்டு பயன்பெற விரும்பும் யாழ்.ஜெய்ப்பூர் நிறுவனப் பயனாளிகள் எமது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு நாளை...
நீரிவேலி பகுதியிலுள்ள தோட்டக்கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலத்தை வியாழக்கிழமை (01) மீட்டதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த மோகன் விஜயமாலா (வயது 41) என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதன்கிழமை (30) இரவு நித்திரைக்கு சென்றவர், அதிகாலை காணாமல் போயுள்ளார். அதனைத் தொடர்ந்து நடத்திய தேடுதலின் பின்னர். போது,...
பாணந்துறை நகரில் தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையடிக்கும் முயற்சியில் தோல்விகண்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர தான் மொஸ்கோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மாணவன் எனவும் , அதற்கான கட்டணம் செலுத்தவே கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வங்கிக்கு வந்த 35 வயதான சந்தேகநபர் கருமபீடத்துக்கு சென்று அங்கிருந்த காசாளரிடம் வங்கி...
வீட்டுக்காரர்களின் அசண்டையீனத்தால் ஒன்றரை மாதக் குழந்தையொன்று மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் புதன்கிழமை இரவு ஊரெழு மேற்கில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் தாயார் பிள்ளைக்கு பால் கொடுத்து தலையணையில் உறங்கவைத்துவிட்டு உடுப்பு துவைப்பதற்காகச் சென்றுள்ளார். தலையணைகள் இன்றி ஒரு தலையணையில் கிடத்தப்பட்ட பிள்ளை, தலை திரும்பி முகம் குப்புற கவிழ்ந்தமையால் அது...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் தொண்டர்களாக குறைந்த சம்பளத்தில் கடமையாற்றிய ஊழியர்கள் 35 பேர் தமது பதவிகளை விட்டு வட மாகாண சுகாதார அமைச்சினால் இடைநிறுத்தப்பட்ட போதிலும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியால் தொடர்ந்து கடமையாற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சு...
வடக்கு, கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் உடன் வெளியேற்றப்பட வேண்டும் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜெனிவாவில் வைத்து வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டிற்கு சார்பாக நடைபெற்ற கூட்டங்களில் கலந்துகொண்டு...
"காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் எனது குழுவினர் போன்று சிறப்பாகச் செயற்பட்டவர்கள் எவரும் இல்லை." இப்படித் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம. காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் ஆணையாளர் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அத்துடன் இதன்...
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் இதுவரையில் வழக்குத்தாக்கல் செய்யப்படாதவர்கள், வழக்குத்தாக்கல் செய்யப்பட்டவர்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள் அனைவரும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்...
Loading posts...
All posts loaded
No more posts
