Ad Widget

122 வாகனங்களும் நீதிமன்றில் ஒப்படைப்பு!

யாழ். நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலவரத்தின் போது கைப்பற்றப்பட்ட 122 வாகனங்கள் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 20ம் திகதி புங்குடுதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் சம்பவத்தினைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் யாழில் நடைபெற்றது. அதன்போது அங்கு கூடியிருந்த இளைஞர்கள் பலர் நீதிமன்ற கட்டடத் தொகுதியின் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதன்...

சுன்னாகத்தில் ஆர்ப்பாட்டம், பேரணிக்கு தடை

புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துவதற்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்தே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். இந்த தடையுத்தரவு...
Ad Widget

ஞானசார தேரர் கைது

பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேரர், கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டுக்கு சென்றிருந்த ஞானசார தேரர், நேற்று திங்கட்கிழமை(25) நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில் அவர் இன்று செவ்வாய்க்கிழமை(26) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உடுத்துறையில் காவல்துறை செய்தது என்ன! உண்மைகள் இதோ

உடுத்துறையில் காவல்துறை சுட்டது பற்றிய செய்திகள் காவல்துறையின் வாக்கு மூலத்துடன் உள்ளுர் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய நபரின் குடும்பத்தின் மீது கஞ்சா காய்ச்சுவதாக காவல்துறையிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை சென்று விசாரித்ததில் அங்கு தடயங்கள் எதுவும் இல்லை . தகவல் கொடுத்தவர் யார் என்பது குறித்த குடும்பத்திற்கு தெரிய வந்தது ம்.தகவல்கொடுத்தவரது வீட்டில் தாக்குதல்...

நிலத்தடி நீர் மாசை ஆராய நோர்வே வல்லுநர் குழு யாழ்.வருகை

சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுவது குறித்து முழுமையான ஆய்வுகளை நடத்த நோர்வே நாட்டிலிருந்து இரு வல்லுநர்களைக் கொண்ட சிறப்புக் குழு நாளை யாழ்ப்பாணம் வரவுள்ளது. சுன்னாகம் பகுதியில் இவர்கள் நேரடியான ஆய்வுகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. சுன்னாகம் பிரதேசத்து குடிதண்ணீருடன் கழிவு ஒயில் கலந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுகின்றன. உள்ளுரில் நடத்தப்பட்ட நில சோதனைகளில்...

மூன்றாவது தடவையாக யாழ்.வருகிறார் மைத்திரி

யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை வருகை தரவுள்ளார். வடமாகாண ஆளுநர் பளிஹக்கார பலாலியில் வைத்து ஜனாதிபதியை வரவேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் ஜனாதிபதி வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளார். மேலும் புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும்,நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நிலமைகளை ஆராய்வதற்காகவுமே ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார் என...

வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது! இந்திய துணைத்தூதுவர் நடராஜன்

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும் நிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.வீசா ( இணைய வீசா) வினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. பலர் ஈ.வீசா...

புங்குடுதீவு படுகொலை! பொலிஸ் விசாரணையில் திருப்தியில்லை! பிரதியமைச்சர் விஜயகலா

புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் பொலிஸார் முன்னெடுத்துவரும் விசாரணைகள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் இல்லை என மகளிர் விவகார பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றிற்கு நேற்று திங்கட்கிழமை வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்த விசாரணைகள் இனியும் சரியான முறையில் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச அமைப்புக்களின் உதவியை நாட...

அரச ஊழியரின் பகல்உணவு இடைவேளை 30 நிமிடங்களாக குறைப்பு! சுற்றுநிருபம்

அரச ஊழியர்களுக்கு பகல் உணவுக்காக வழங்கப்படும் இடைவேளை நேரம் 30 நிமிடங்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகேயினால் சகல அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இவ்விசேட சுற்று நிருபம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்களுக்கு சிறந்த, வினைத்திறன் மிக்க அரச சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம்...

மஹிந்த பெண்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்! அரசியலில் மீண்டும் இடமளிக்கக் கூடாது!- ரணில்

யாழ். மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு இந்நாட்டு சகல பெண்களிடமும் மன்னிப்பு கோர வேண்டுமென்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார். இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீள் எழுச்சி பெறும் அளவுக்கு அரசியல் வங்குரோத்து...

வித்தியாவின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம்!

புங்குடுதீவில் கூட்டு பாலியல் வன்கொடுமையின் பின் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வித்தியாவின் படங்கள் வெளியிடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் வவுனியா பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வித்தியாவின் புகைப்படங்களை வெளியிடும் நபர்களை தண்டிக்க அதிகாரிகள்...

ஊர்வலத்துக்கு தடை கோரும் பொலிஸாரின் மனு நிராகரிப்பு

யாழ்ப்பாணம், திக்கம் பகுதியில் நாளை செவ்வாய்க்கிழமை (26) நடத்தப்படவுள்ள ஊர்வலத்துக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு, நிராகரிக்கப்பட்டது. பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திக்கம் பகுதியில் நாளை எதிர்ப்பு ஊர்வலமொன்று நடத்த ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையிலேயே, பாதுகாப்பு காரணம் கொண்டு அவ்வூர்வலத்தை நடத்த தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸாரால்...

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு ஆதரவாக கொழும்பில் அமைதி பிரார்த்தனை

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை போன்று மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி இன்று மாலை 6.30 அளவில் அமைதியாக சோகத்தை பகிர்ந்து கொள்ளவும் நிகழ்வொன்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. சிறுவர் விவகார இராஜாங்க...

தாக்குதலுக்குள்ளான நீதிமன்றம் இராணுவத்தினரால் புனரமைப்பு

கடந்த 20ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் உடைக்கப்பட்ட கண்ணாடிகள் மற்றும் பொருட்களை இராணுவத்தினர் புனரமைப்பு செய்ய ஆரம்பித்துள்ளனர். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி, நீதிமன்றத்தின் முன்னால் கூடியவர்களில் சிலர் நீதிமன்றத்தின் மீது கற்களை வீசி நீதிமன்ற கண்ணாடிகளை உடைத்தும் பூமரக்களை பிடுங்கி எறிந்தும் வாகனங்களை உடைத்தும் நீர்க்குழாய்களை உடைத்தும் அட்டகாசம் செய்தனர்....

பொலிஸார் மீது தாக்குதல்; பதிலுக்கு துப்பாக்கி சூடு: ஒருவர் காயம்!

வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப்பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தினர். பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் மருதங்கேணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மந்திகைக்கு மாற்றப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உடுத்துறை,...

யாழ். பொலிஸ் இடமாற்றத்தில் மஹிந்தவுக்கு சந்தேகம்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களில் இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாண பொலிஸ் உயரதிகாரிகளின் இடமாற்றம் சந்தேகத்துக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.

யாழ் பொலிஸ் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரால் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எப்படித் தப்பிச் சென்றார்? தமிழ்மாறன் கேள்வி

புங்குடுதீவு சம்பவம் தொடர்பில் வி ரி தமிழ்மாறன் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கை‬ பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன். என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ் மக்கள் மத்தியில் எனக்கு இருந்து வரும் அரசியல்...

கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதி ஊடாக இன்றைய தினம் மாலை யாழ்ப்பாணம் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது கைதடி வீதியால் வந்த கனரக வாகனத்தோட கோப்பாய் சந்தியில் வைத்தே இவ்விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அவர் தற்போது யாழ்.போதனா...

யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

மத்திய பஸ் நிலையத்தில் பெண்கள் விடுதலை சிந்தனை அமைப்பின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (23) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு யாழ் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, யாழ் நகரப்பகுதிகளில் கவச வாகனங்கள் தரிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபர்கள் கடந்த புதன்கிழமை (20) நீதிமன்றத்துக்கு...

கொக்குவிலில் ஆர்ப்பாட்டம்!!

புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு தாமதமின்றி நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் ‘பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின்’ ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று கொக்குவிலில் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ். பஸ் நிலையப் பகுதியில் நடைபெறும் என...
Loading posts...

All posts loaded

No more posts