Ad Widget

பரந்தன் சிறுமி வன்புணர்வு; கண்டித்து இன்று போராட்டம்

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் 6வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து ஊர் மக்களும் பாடசாலை மாணவர்களும் இன்று கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர். புங்குடுதீவு சிறுமி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சோகம் ஆறுவதற்கு முன்னர் பரந்தன் - சிவபுரத்தில் மற்றுமொரு சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாள். கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என ஏற்கனவே...

தமிழ் இளைஞர் , யுவதிகளே பொலிஸ் சேவையில் இணையுங்கள்; கோருகின்றார் வடக்கு டிஜஜி

வடக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையினை நீக்கும் பொருட்டு பொலிஸ் திணைக்களத்தினால் ஆட்சேர்ப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ . ஜயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கு மாகாணத்தில் தமிழ் பொலிஸ் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் பெரும்...
Ad Widget

20ம் திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தங்களுடன் அமைச்சரவையில் சட்டமூலத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை நேற்று மாலை கூடியது. அதன்போது ஜனாதிபதி 20ம் திருத்தம் குறித்த அமைச்சரவை பத்திரத்தை சமர்பித்துள்ளார். இதன்போது இந்த திருத்தம் மூலம் சிறு கட்சிகளுக்கு...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெருமையுடன் வழங்கும் மலைத்தென்றல் – 2015!

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெருமையுடன் நடாத்தும் தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்களையும் சிறப்புக்களையும் வெளிக்காட்டும் மலைத் தென்றல் நிகழ்வு இவ் வருடமும் மிகவும் பிரமாண்டமான முறையில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (30.05.2015) பிற்பகல் 01.30 மணி முதல் மாலை 06.30 மணி வரை ஊவா மாகாண நூலக...

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதியாக எம்.இளஞ்செழியன் நியமனம்

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதியாக குற்றவியல் வழக்குகள் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு வழக்குகளுக்கான மாகாணம் மற்றும் மாகாண மேல்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன், பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், சுண்டுக்குழி பாடசாலை மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின்...

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம், வடக்கு முதல்வர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

யாழ் குடாநாட்டில் முன்னெடுக்கப்படவிருக்கும் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை (27.05.2015) யாழ் பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ் குடாநாட்டுக்குத் தண்ணீரை விநியோகிப்பதில் எழக்கூடிய பல்வேறு பிரச்சினைகளையும் கருத்திற் கொண்டு, வடமாகாணசபை குடாநாட்டுக்கான குடிநீர்த்தேவையைப் பூர்த்தி...

சிறுபராய திருமணங்களுக்கு முற்றுப்புள்ளி?

நாட்டில் அதிகரித்து வரும் சிறுவயது திருமணங்களையும் சிறுவர் துஸ்பிரயோகங்களையும் கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி ரோஸி சேனாநாயக்கா தெரிவித்தார். வடக்கில் இடம்பெறும் சிறுவர் வன்புணர்வுகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'சிறுவயது திருமணங்கள் நாட்டில்...

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரினால் சற்றுமுன்னர் நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடமே இந்த நோட்டீஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

கடல் தீர்த்தத்தில் எரியும் விளக்கு: காண காட்டா விநாயகர் ஆலயத்தில் பக்தர் கூட்டம்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த விசாகப் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சிலாவத்தை, தீர்த்தக்கரைக் கடலில் கடல் நீரில் தீர்த்தம் எடுத்துவரப்பட்டு முள்ளியவளை, காட்டா விநாயகர் ஆலயத்தில் அம்மன் மண்டபத்தில் விளக்கேற்றப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வை பெருமளவான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்து வருகின்றனர்.

வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தாக்குதலுக்குள்ளான இளைஞன் ஒருவனின் உறவினர்கள் கொடுத்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைநகரில் வீதியில் திங்கட்கிழமை (25) நின்றிருந்த இளைஞனை மோட்டார் சைக்கிள்களில் கடத்திச் சென்று 4 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் காரைநகர் பரமநாதன் அபிராம்...

குடாநாட்டில் சில்லறைகளுக்கு தட்டுப்பாடு

பெற்றோல் செற், பேருந்துகளில் ரிக்கற் மற்றும் கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு மிச்சக் காசுகள் கொடுக்கப்படுவதில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.அது உண்மை தான் அதற்கு காரணம் குடாநாட்டில் போதியளவு சில்லறைக்காசுகள் இல்லை என்று வணிகர் சங்கத் தலைவர் ஜெயசேகரம் சுட்டிக்காட்டினார். நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.அதில் கலந்து...

AH1N1 இன்புளுவென்சா வைரஸ் தொற்று குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

இலங்கைத் தீவில் AH1N1 இன்புளுவென்சா வைரஸ் தொற்று அபாயம் உள்ளதாக எச்சிரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தீவில் தற்போது கடுமையான வெப்பமான காலநிலை நிலவி வருகிறது. அதனால் AH1N1 வைரஸ் மக்கள் மத்தியில் பரவி வருவதாக தொற்று நோய் பிரிவு பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். காய்ச்சல், சளி, தொண்டை வலி, இருமல் போன்ற நோய்...

கிளிநொச்சியில் கொடூரம்!! பாடசாலை சென்ற 7 வயதுச் சிறுமியை கடத்தி கூட்டுப் பாலியல் வன்முறை!

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனக் கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுமி வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரை இடைவெளியில் மறித்த சிலர் பொதுமலசலகூடத்தில் வைத்து...

யாழில் இடம்பெற்ற போராட்டங்களில் கைதானவர்களில் அப்பாவிகள் விடுவிக்கப்படுவர்! ரணில் கூட்டமைப்புக்கு உறுதியளிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் எதிரொலியாக யாழில் இடம்பெற்ற போராட்டங்களின்போது கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவர்களில் சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களைத் தவிர ஏனையோர் விரைவில் விடுவிக்கப்படுவர். இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் உறுதியளித்தார் என அக்கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சுரேஷ்...

நுவரெலியாவில் வித்தியாவுக்காக அமைதி ஊர்வலமும் ஆத்ம சாந்தி நிகழ்வும்

புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அமைதி ஊர்வலமும் ஆத்ம சாந்தி நிகழ்வும் நுவரெலியாவில் நடைபெற்றது. புனித சவேரியார் கல்லூரிக்கு அருகிலிருந்து ஆரம்பமான இப் பேரணி, நுவரெலியா பிரதான வீதி ஊடாக லோசன் சுற்றுவட்டத்தை வந்தடைந்ததுடன் அங்கு இரங்கல் உரையும் சர்வ மத வழிபாடுகளும் இடம்பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய மாகாண சபை உறுப்பினர்...

ஞானசார தேரர் பிணையில் விடுதலை!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறுந்துவத்தை பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் ஞானசார தேரர் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு முன்...

பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் மாணவர்கள் கோரிக்கை

வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் இனங்கண்டு அதிகபட்ச தண்டனை வழங்குவதுடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது இருக்க நடவடிக்கை எடுக்க வேணடும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பிலும்...

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்தார் ஜனாதிபதி

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண...

அடிமை கொண்டவர்களைப்போல் எமது மக்களை காவல்துறையினர் நடத்தக் கூடாது! டக்ளஸ்

வடக்கில் பணியாற்றிவரும் காவல்துறையினர், எமது மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, மனிதாபிமான முறையில் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியது அவசியம் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். மாறாக, எமது மக்களை அடிமை கொண்டவர்களைப்போல் கருதி, ஆதிக்க மனப்பான்மையுடன் நடத்தக் கூடாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்...

நீதிமன்றம் மீதான தாக்குதலாளிகள் குறித்த ஆதாரங்களை தந்துதவுமாறு பொலிஸார் வேண்டுகோள்!

யாழ். நீதிமன்ற வளாகத்தின் மீது கடந்த 20 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வீடியோ, புகைப்படங்களை எடுத்தவர்கள் அவற்றைத் தந்துதவுமாறு குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கேட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவியின் படுகொலையைத் தொடர்ந்து இடம்பெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து யாழ். நீதிமன்ற வளாகத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 130 பேர் கைது செய்யப்பட்டனர்....
Loading posts...

All posts loaded

No more posts