Ad Widget

யாழ். இராணுவ ஊடக இணைப்பாளர் இடமாற்றம்

யாழ். மாவட்ட இராணுவப் படைத்தலைமையகத்தின் ஊடக இணைப்பாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த லெப்டினன் கேணல் எம்.ஏ.ஆர்.எஸ்.கே.மல்லவராச்சி, குருநாகல் விஜயபாகு காவல்படையணி தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ தலைமையக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் யாழ். மாவட்ட இராணுவப் படைத்தலைமையகத்தின் ஊடக இணைப்பாளராக கடமையாற்றிய மல்லவராச்சி, யுத்தத்துக்கு பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தினரின் செயற்பாடுகள் மற்றும் இராணுவ ஊடக அறிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.

இவருடைய இடத்துக்காக புதிய ஊடக இணைப்பாளராக யார் நியமிக்கப்படவுள்ளனர் என்பது தொடர்பிலான விவரங்களை இதுவரைஇராணுவத் தலைமையகம் வெளியிடவில்லை.

Related Posts