மோட்டார் கண்டு தாக்கியதாலேயே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்திருக்கலாம். அவர் தற்கொலை செய்யவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்திய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தற்கொலை செய்யவில்லை. ஏனெனில் அவரின் தலையில் இருக்கும் காயம் பெரிதாகவும் மண்டையோட்டின் ஒரு பகுதி வெளித்தள்ளியும் இருந்தது.
துப்பாக்கியால் அவர் தன்னைத் தானே சுட்டிருப்பின் ரவை துளைத்த அடையாளம் இருந்திருக்கும் – என்றார். மேலும் அவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்றும் அவர்கள் தொடர்பில் தனக்குத் தகவல்கள் கிடைக்கவில்லை என்றும் அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிட்ட கருணாவின் உண்மை முகம் என்ன? விவரிக்கும் விடுதலைப் புலிகள்…