சர்வதேச அழுத்தத்தினாலேயே மஹிந்த அலரிமாளிகையிலிருந்து ஓடினார்- மாவை

தேர்தல் தோல்வியை அடுத்து சதித்திட்டத்தினூடாக ஆட்சியை தக்கவைக்க முயன்ற மஹிந்த ராஜபக்ஷ மேற்குலகம் உட்பட முழு சர்வதேசமும் காட்டிய எதிர்ப்பு மற்றும் அழுத்தம் காரணமாகவே அலரிமாளிகையிலிருந்து ஓடினார் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட வேட்பாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நடாத்திய பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து...

வெள்ளைக்கொடி விவகாரம் மாவையின் குற்றச்சாட்டுக்கு கஜேந்திரகுமார் பதிலடி!!

2009 மே18 அதிகாலை அங்கு சிக்குண்டு உயிருக்காக போராடிக்கொண்டிருந்த ஒன்றரை இலட்சம் மக்களது உயிரை நினைத்து நானும் மாவை அண்ணரும் அழுதோமென தெரிவித்தார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர் அந்த கடைசி கணங்களினில் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன்...
Ad Widget

ரிஷாட் பதியூதீன் தேர்தல்கள் சட்டங்களை மீறுவதாக சிவசக்தி ஆனந்தன் முறைப்பாடு

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தேர்தல்கள் சட்டங்களை பாரியளவில் பகிரங்கமாகவே மீறி வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் கடிதம் மூலம் முறைப்பாடு செய்துள்ளார். அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வன்னித்...

“தேசியத்தலைவர் பிரபாகரனை விற்றுப்பிழைத்து அரசியல் நடத்த வேண்டாம்” – திரு ந.அனந்தராஜ்

மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. என்றுமில்லாதவாறு பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தமை தமிழர்கள் எப்போதும் விலைபோகதவர்கள் என்பதை மீண்டும் ஒருதடவை உணர்த்தியுள்ளது. மேற்படி இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வடமராட்சியின் ஒரு சிறந்த கல்வியியலாளரும் முன்னணி வேட்பாளருமாகிய...

போர்க்குற்றம் புரிந்த மஹிந்தவுடன் கூட்டமைப்பு கைகோர்த்துள்ளது! – கஜேந்திரகுமார்

தமிழ் மக்களை படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த மஹிந்த ராஜபக்ஷவுடன், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இணைந்து கொண்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முண்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், தமிழ் தேசிய...

சர்வதேச நிலைப்பாட்டை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றியமைத்தோம்! – சுமந்திரன்

வெறுமனே அரசியல் தலைமைத்துவத்தை கொடுத்து பார்வையாளராக நாடாளுமன்றத்தில் நாம் அமர்ந்திருக்கவில்லை. நாடாளுமன்றத்திலேயும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், சர்வதேசத்திலும் இராஜதந்திர அணுகு முறையை மேற்கொண்டு, 2009இல் தமிழ் மக்கள் உரிமைப் போர் தொடர்பில் இருந்த நிலையை முற்றாக மாற்றி சர்வதேச நிலைப்பாட்டை தமிழர்களுக்கு சாதகமாக மாற்றியமைத்தோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்....

விருப்பு வாக்கு சர்ச்சையை தடுக்க புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துகிறார் தேர்தல் ஆணையாளர்!

விருப்பு வாக்கு தொடர்பான சர்ச்சைகளை தடுக்க புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இம்முறை பொதுத் தேர்தலில் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை விருப்பு வாக்கு எண்ணும் நிலையங்களுக்குள் அதிகளவில் அனுமதிக்க தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார். விருப்பு வாக்கு எண்ணுதல் தொடர்பிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நோக்கில்...

புள்ளடியிடப்பட்ட தபால் வாக்குச்சீட்டை பேஸ்புக்கில் பதிவேற்றிய கஜேந்திரகுமாரிடம் சிஐடி விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சி.கஜேந்திரகுமார் நேற்று நான்கு மணிநேரம் விசேட குற்றபுலனாய்வு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை 10.30 இல் இருந்து பிற்பகல் 2.30 வரை இவ் விசாரணை இடம்பெற்றுள்ளது. தபால் மூல வாக்களிப்பின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு...

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் 29 பேர் கொழும்பு வருகை!

தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் இறுதிக்குழு நேற்று இலங்கை வந்தடைந்துள்ளது. தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் கண்காணிப்பாளர்கள் 29 பேரைக் கொண்ட குழுவே நேற்று இலங்கை வந்திருப்பதாக தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன. மாலைதீவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் இப்ராஹிம் தா ஹித் இக்குழுவிற்குத் தலைமை தங்குகின்றார். அதேநேரம், பொதுநலவாய தேர்தல் கண்காணிப்புக் குழுவைச்...

சுனாமியின் போது காணாமற்போன முல்லைத்தீவு சிறுவன் 11 வருடங்களுக்குப் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

சுனாமியின் போது 9 வயதில் காணாமல்போன சிறுவன் தற்போது 21 வயது இளைஞராக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் குமாரபுரத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட ஜெகநாதன் குருதேவன் என்பவரே சுனாமியில் காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போன போது தரம் 4 இல் கல்வி கற்றுள்ளார். 2004 ஆம் ஆண்டு...

உண்மை அறியப்பட்டதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு வேண்டும்! – வவுனியாவில் சம்பந்தன்

"போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மை அறியப்படவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் வழங்கப்படவேண்டும். அவ்வாறான நிலைப்பாடு இருந்தாலே நாட்டில் நல்லாட்சி ஏற்படும். உண்மை அறியப்பட்டதும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு வேண்டும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த்...

ஒவ்வொரு தமிழனும் கூட்டமைப்பை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்!

"தமிழர்களாகிய நாம் நமது தேசியத்தைக் கட்டிக்காக்கவேண்டும் என்றால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தமிழனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி வாக்களிப்பதன் மூலமே கட்டிக்காக்க முடியும்.'' - இவ்வாறு வடமாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "ஒவ்வொரு கிராமங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

தாஜீதீனின் மரண ஓலத்தை சிநேகிதியை கேட்க வைத்து கொடூரமாகக் கொன்றனர்!

றகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டபோது அவரின் சிநேகிதிக்கு தாஜூதீனின் மரண ஓலத்தை தொலைபேசி மூலம் கொலைகாரர்கள் கேட்க வைத்தனர். அத்துடன் இந்தக் கொலைக்காக 7 வெள்ளை வான்கள் பயன்படுத்தப்பட்டன என விசாரணைகள் மூலம் தெரிய வந்திருப்பதாக பிரதி நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்...

விடுதலைப் புலிகளுக்கு இரு முறை பணம் வழங்கிய மஹிந்த – ரணில்

2005ம் ஆண்டு தமிழர்கள் வாக்களிக்காதிருக்க தமிழீழ விடுதலைப் புலிகள் பணம் கோரியதாகவும் எனினும் தான் வழங்கவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்று டி.வி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட போதே, அவர் இவ்வாறு கூறியுள்ளார். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு முறை விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியதாவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முதலில்...

ஜனாதிபதி மீது கோபம் இல்லை: அவர் பிரதமர் பதவியை எனக்கு வழங்காமல் இருக்க மாட்டார்! -மகிந்த

ஜனவரி 9ம் திகதி அதிகாலை தான் வௌியேறியது மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு அல்ல என்றாலும் மக்களின் வேண்டுகோளை புறக்கணிக்க முடியாத நிலையில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தன் மீது மக்கள் அன்று வைத்திருந்த அன்பு இன்னும் அதேபோன்று இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரிவி...

தேர்தல் முடியும் வரை பேசமாட்டேன் – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவடையும் வரையில் தான் ஊமையாக இருக்கப்போவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். பிரம்மகுமாரிகள் நிலையத்தின் புதிய கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு திரும்பிய முதலமைச்சரிடம், 'உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக பேசப்படுகின்றதே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?' என்று ஊடகவியலாளர் ஒருவர்...

உ/த மாணவர்களுக்கு ஒத்துழைக்கவும்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு அவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என பொலிஸாரால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 'மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள், சிறந்த பெறுபேறுகளைப்...

திருமலையில் நடை பெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம்

திருகோணமலையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(10) மாலை 6 மணியாளவில் சிவன் கோவில் மண்டபத்தில் மாவட்ட அமைப்பாளர் ராஜகோண் ஹரிகரன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்ட முதன்மை வேட்பாளருமான...

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை – டக்ளஸ் தேவானந்தா

தேவைக்கு அதிகமாகவும் மக்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாகவும் வடக்கு கிழக்கில் படையினர் நிலைகொண்டிருப்பதை நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். சுன்னாகத்தில் இன்றைய தினம் (11) இடம்பெற்ற கண்ணகி மற்றும் சபாபதிப்பிள்ளை நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடன் இடம்பெற்ற...

மதவாச்சியில் விபத்துக்குள்ளான கொழும்பு – யாழ் சொகுசு பஸ்

கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் சொகுசு பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் மதவாச்சியில் விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது, இன்று அதிகாலை 4 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் சொகுசு பஸ் உம், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற லொறியும்...
Loading posts...

All posts loaded

No more posts