- Saturday
- April 18th, 2026
இனஅழிப்பிற்கான நீதி விசாரணை வேண்டி யாழில் பாதயாத்திரை போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலிருந்து புறப்படும் இப்பாத யாத்திரை யாழ்ப்பாணம் வரை ஏ-9 வீதி வழியே பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாணசபை உறுப்பினர்களான கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவுடன் இணைந்து முன்னெடுக்கவுள்ள பாதயாத்திரை போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள்...
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார். வவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், விக்னேஷ்வரன் மீது பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார். இந்தநிலையில் சேனாதிராஜா நேற்று இந்திய ஊடகமான ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது: பாராளுமன்ற தேர்தலின்போது, விக்னேஷ்வரனின் நடத்தை...
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச நீதிமன்ற விசாரணை தேவை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அத்துடன் மீண்டும் ஒரு சர்வதேச விசாரணை...
யாழ். கல்விவலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே சைவசமய அறிவை மேம்படுத்தும் வகையில் சைவநெறிப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதற்கமைய பேச்சு, மாலை கட்டுதல், தோரணம் பின்னுதல் மற்றும் பண்ணிசை ஆகிய போட்டிகள் தரம் 6 முதல் க.பொ.த உயர்தர மாணவர்களிடையே, நான்கு பிரிவுகளாக நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,...
மேல் மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான புதிய முதலமைச்சர்கள் இருவர் நேற்று (07) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாணசபை முதலமைச்சாராக இசுரு தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதியின் முன்னிலையில் மேல்மாகாண ஆளுனர் கே.சி.லோகேஸ்வரன் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். அதேவேளை வடமேல் மாகாண...
பேராதனை பல்கலைக்கழகத்தின் தொலைகல்வி நிலையத்தின் முதல்கலைத் வௌிவாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி இம்மாதம் 30ஆம் திகதியாகும். இப்பரீட்சைக்காக 2011ஆம் ஆண்டுக்குப் பின்னரும் செல்லுபடியான பதிவை மேற்கொண்டோர் பரீட்சைக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப்படிவங்களையும் மேலதிக விபரங்களையும் www.pdn.ac.lk/edce என்ற இணையதள முகவரியினூடாக பெற்றுக்கொள்ளலாம். அல்லது அலுவலக நேரங்களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக்கல்வி...
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர் முந்தைய ராஜபக்சே அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். அதை தொடர்ந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அப்போது மிதக்கும் ஆயுத கிடங்கை...
வடமாகாணசபையின் அனுமதியின்றி மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் ஜெனீவா அமர்வுகளில் மாகாணசபையின் சார்பாக கலந்து கொள்ள முடியாது என தெரிவித்திருக்கும் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தேவை இருப்பின் தனிப்பட்ட முறையில் ஜெனீவா அமர்வுகளில் பங்கெடுக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 14 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் மாகாணசபை சார்பில் உறுப்பினர்கள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் நியமிக்கப்பட்டதும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் ஆகியமையும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் திங்கட்கிழமை (07) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நாட்டின் தேசிய...
யாழ்.ஓட்டுமடம் பகுதியில் பழைய இரும்பு விற்பனை செய்யும் இடத்தில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (07.9.2015) முற்பகல் குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி கிராம சேவகர் பிரிவு ஜே-88 பிரிவில் உள்ளடங்கும் ஓட்டுமடம் ஆலடி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில் ஜெ.பத்மஜெகன் (வயது-28), எஸ்.சுரேஷ் (வயது-26)...
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தேர் மற்றும் தீர்த்தத் திருவிழாக்களின்போது, கலாசாரச் சீரழிவு குற்றங்கள் மற்றும் ஏனைய குற்றம் புரிபவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்படாமல், கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று எச்சரிக்கை செய்துள்ளார். போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த ஒருவருக்கு எதிரான வழக்கு தொடர்பில் யாழ்ப்பாணம் மேல்...
நல்லாட்சிக்கு அத்திவாரம் நிரந்தர சமாதானம். இந்த நாட்டில் நிரந்தர சமாதானம் வேண்டுமாக இருந்தால் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படல் வேண்டும். இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் சிங்கள மக்களும் விரும்புகின்றார்கள். எமது மக்களை நாம் கைவிடமாட்டோம். எமது மக்கள் விரும்புகின்ற தீர்வையே நாம் ஏற்றுக்கொள்வோம். - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது, மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு...
கர்ப்பிணித் தாய்;மார்களுக்கு வழங்கவேண்டிய போசாக்கு உணவுப்பொருட்களுக்குப் பதிலாக சவர்க்காரம், சலவைச் சோடாத்தூள் (சேர்வ் எக்செல்), சீனி, பிஸ்கற் போன்றவை வழங்கப்பட்டது நிரூபணமாகியுள்ளதையடுத்து சங்கத்தின் பொது முகாமையாளரையும், கிளை முகாமையாளரையும் பதவியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாகக் கூட்டுறவு அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் செய்திக்குறிப்பில், 'கர்ப்பிணிகளுக்கான போசாக்கு உணவு வழங்கலில் அதிருப்தி - சுன்னாகம் ப.நோ.கூட்டுறவுச் சங்கம்...
எதிர்வரும் 14ம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை சையின் அமர்வுக்கு கூட்டமைப்பு உத்தியோக பூர்வ பிரதிநிதிகளை அனுப்புவது குறித்து இன்னும் முடிவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அறிவித்துள்ளார். இருப்பினும் தனிப்பட்ட ரீதியில் சில உறுப்பினர்கள் செல்லக்கூடும் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அனந்தி...
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டு குழுவின் சர்வதேச விசாரணை கோரும் கையெழுத்து போராட்டம் கிழக்கிற்கும் நகர்ந்துள்ளது. 4 வது நாளான இன்று கிளிநொச்சி மற்றும் திருகோணமலைக்கும் விஸ்தரிக்கப்பட்டது. திருகோணமலையில் இன்று மாலை 3 மணியளவில் மறைமாவட்ட முன்னாள் ஆயர் வணக்கத்திற்குரிய கிங்ஸ்லி சுவாம்பிள்ளை போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் இதேவேளை யாழ்பாணத்திலும் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது...
வடமாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து யாழ்ப்பாணம் மாவட்டச் செலயகம் முன்பாக இன்று திங்கட்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். புதிய அரசாங்கம் வழங்கவிருப்பதாக கூறப்படும் வேலைவாய்ப்பில் தங்களை முன்னிலைப்படுத்தி உள்வாங்க வேண்டும் எனக்கோரி இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன்...
குருநாகல் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ், சண்டேலீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் பற்றி இதுவரையிலும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் சட்டரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிகாரிகளுக்கு கட்டளையிட்டுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் பிரதியமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமான நிகழ்வுகள் பெரும்பாலும் நாளை இடம்பெறலாம் என அரசாங்க தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்படி, ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 45 பேர் பதவிகளை ஏற்றுக்கொள்ளவுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டது. அன்றைய தினம் சத்தியப்பிரமாணம் மேற்கொண்ட 42...
Loading posts...
All posts loaded
No more posts
