Ad Widget

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்கு வழங்கப்படாவிடின், கௌரவப் பதவியை தூக்கி எறிவேன்- செல்வம்

பெரும் எதிர்ப்பார்ப்பையும், வாதப்பிரதிவாதங்களையும் ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்படாவிட்டால், தனக்கு வழங்கப்பட்டுள்ள குழுக்களின் பிரதித் தலைவர் என்ற கௌரவப் பதவியை தூக்கி எறியப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று நடைபெற்ற போது, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டார்.

நாடாளுமன்றில் மக்கள் பலம் கொண்ட மூன்றாவது கட்சியாக தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு விளங்குவதாகவும், முதல் இரு கட்சிகளும் தேசிய அரசில் இணைவதனால் கூட்டமைப்பிற்கே எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை அது குறித்து முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் கூறுகையில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஆதரவா ? எதிர்கட்சி தலைவராக எதிர்ப்பா ? TNA எவ்வாறு செயற்பட போகின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டமைப்கபின் எதிர்க்கட்சித்தலைவர் கோரல் ஒரு நாடகம் ! எதிர்கட்சியே இல்லாமல் அரசை நடாத்துவதற்கான தந்திரோபாயம். உண்மையில் நாங்கள் எதிர்பார்க்கும் எதிர்கட்சி அமையாது என்றே அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்

Related Posts