Ad Widget

கூட்டமைப்பு தலைமை தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது ! – சுரேஸ் பிறேமச்சந்திரன்!!

நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையென தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளினில் ஈடுபடவேண்டாமென தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையிடம் சுரேஸ்பிறேமச்சந்திரன் கோரியுள்ளார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் நடந்து முடிந்தது சர்வதேச விசாரணையெனவும் இனி சர்வதேச விசாரணை பற்றி கதைக்க வேண்டியதில்லையெனவும் தெரிவித்துள்ளார். இது திட்டமிட்டு மக்களினை குழப்பும் நடவடிக்கையாகும். அதே கருத்தினை தான் கட்சி தலைவரான சம்பந்தனும் சொல்லி வருகின்றார்.

உண்மையில் நடந்து விசாரணையின் ஒரு அங்கமே. அடுத்த கட்டமாக அறிக்கை வெளிவந்த பின்னர் அதனை சர்வதேச நீதிமன்றத்திற்கோ அல்லது தீர்ப்பாயத்திற்கோ கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதன் ஊடக நீதி வழங்கப்படவேண்டுமென சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தினில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:-

அதே போன்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சுமந்திரன் அவரது பெயரை பிரேரிக்க ஆளும் தரப்பு உறுப்பினரொருவர் ஆமோதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் தற்போது எதிர்கட்சி ஆசனத்திலிருந்து ஆளும் தரப்பு ஆசனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கூட்டமைப்பு அமைச்சுக்களையோ பதவிகளையோ நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்போவதில்லையென தெரிவித்துவிட்டு அதற்கொப்பான குழுக்களின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை எத்தகையதென அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

உண்மையில் எந்தவொரு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தெரியாதே தடாலடியாக குழுக்களின் பிரதி தலைவர் நியமனம் நடந்துள்ளது. சுமந்திரன் பிரேரிக்க சிங்கள உறுப்பினரொருவர் ஆமோதித்துள்ளமை ஏற்கனவே திட்டமிட்டு செய்த ஏற்பாடோவென சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதனிடையே எதிர்கட்சி தலைவராக கூட்டமைப்பின் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் பொறுப்பேற்கவுள்ளார். தமிழீழமென வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து வாக்கு கேட்ட அமிர்தலிங்கம் அப்போது எதிர்கட்சி தலைவரானார். அவர் அப்பதவியினை ஏற்பது சர்வதேச மட்டத்தில் எமது பிரச்சினையினை பேச உதவுமென்றனர். கடைசியில் வெறும் மாவட்ட சபையுடன் அவரது கதை முடிந்தது அனைவரிற்கும் தெரியும். இரா.சம்பந்தனுக்கு எமது பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தும் தேவையிருப்பதாக கருதவில்லை. ஏற்கனவே அது சர்வதேச மயப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அவரும் அமிர்தலிங்கம் போன்று போர்க்குற்ற விசாரணையினை சுருக்கிவிடாது விட்டால் போதுமெனவும் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Related Posts