அரசியல் பலம் எமக்குக் கிடைக்கும் பட்சத்தில் நலன்புரி முகாமில் வாழும் மக்களின் வாழ்க்கை முடிவுக்குக் கொண்டுவரப்படும் – டக்ளஸ் தேவானந்தா

எமது மக்களின் நலன்புரி முகாம் வாழ்க்கை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மல்லாகம் நீதவான் முகாமிற்கு இன்றைய தினம் (14) விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் அவர்கள் முகாம் மக்களுடன் கலந்துரையாடும்...

மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுப்பிய ஐந்து பக்க கடிதத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஒரு பக்கத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணைக்கு தான் மதிப்பளித்தது போல பொதுத் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ...
Ad Widget

கடிதம் அனுப்பினாலும் மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டனர்!

எந்தவகையில் கடிதம் கிடைத்தாலும் கட்சிக்காரர்கள் தங்களது தீர்மானத்தை எடுத்து முடிந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட வேட்பாளருமாகிய மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை கூட்டமைப்பாக வலுப்படுத்தியவன் தான் என கடவத்த பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குறித்த கடிதத்தில் உள்ள விடயங்களை ஊடகங்களில் பிரசுரிக்காதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள்...

தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தென்னிந்திய கலைஞர்கள்!!

யாழ். மாநகரசபை மைதானத்தில் வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்ற சுயேட்சைக் குழு 6இன் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தென்னிந்திய கலைஞர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. தென்னிந்தியாவின் பிரபல பாடகர்களான ஹரிஸ் ராகவேந்திரா, மால்குடி சுபா மற்றும் ரி.எம்.சௌந்தரராஜனின் மகன் ரி.எம்.எஸ்.செல்வம் ஆகிய பாடகர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். அத்துடன், தமிழ்த் திரைப்பட பிரபல நகைச்சுவை நடிகரான செந்தில்...

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை குறைகூறி மக்களிடம் பேச்சுவாங்கிய கூட்டமைப்பு உறுப்பினர்

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை குறைகூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரை பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் ஏசிய சம்பவமொன்று வியாழக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் யாழ். நகருக்கு அண்மையிலுள்ள ஒரு இடத்தில் நடைபெற்றது. இதன்போது, 'வடமாகாண முதலமைச்சர் அண்மையில் வெளியிட்டு வரும் அறிக்கையானது,...

பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுமுறை!

தேர்தலில் வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவதனைப் போன்றே பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கும் விடுமுறை வழங்கப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார். மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் போதியளவு கால...

இன்றுடன் ஓய்கிறது பிரசார யுத்தம்!

எதிர்ரும் 17ம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது. நாட்டின் தேர்தல் சட்டத்திற்கு அமைய தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தக் காலத்தில் வாக்காளர்கள் சுயாதீனமாக முடிவு எடுக்கக் கூடிய வகையில் வேட்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென,...

மீண்டுமொரு புரட்சியை வேண்டி நிற்கின்றோம் – சுமந்திரன்

உலகம் வியந்த ஒரு புரட்சியை ஜனவரியில் தமிழ் மக்கள் நிகழ்த்திக் காட்டியதால் வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இன்னொரு புரட்சியை வேண்டி நிற்பதாக அமைந்துள்ளது என்று யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். கரவெட்டி கிளவிதொட்டம் பிள்ளையார் கோயில் முன்றலில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,...

ஐ.தே.க வேட்பாளர் மீது தாக்குதல் குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சின்னராஜா விஜயராஜன், கிளிநொச்சி வைத்தியசாலை முன்பாக வைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (13) தாக்கியதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி வைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை நடத்துவதற்காகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும்...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சரியான உணவு வழங்கப்படும்

கர்ப்பிணித் தாய்மாருக்குத் தேவையற்ற விதத்தில் சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால் வழங்கப்பட்ட பொருட்களுக்கு மாற்றீடு வழங்கப்படும் என உடுவில் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணித் தாய்மாருக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் சத்துணவுகள் வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைய கர்ப்பிணித் தாய்மாருக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சுன்னாகம் பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தால் கர்ப்பிணித் தாய்மாருக்கு அரசாங்கத்தால்...

தன்மானத் தமிழர்கள் சலுகைகளுக்கு விலைபோகார்! வடக்கு, கிழக்கில் கூட்டமைப்பு சாதனை படைக்கும்!!

"வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று மாபெரும் சாதனை படைக்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அக்கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "எமது தமிழ் மக்கள் தன்மானத் தமிழர்கள். அவர்கள் சலுகைகளுக்கு...

வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம்!

தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் அறிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தினத்தன்று இடம்பெறும் தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமை மீறல்களை தடுப்பதற்காக விசேட அலகொன்றை தாபிக்க தீர்மானித்துள்ளது. அவ்...

வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு

வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார். அவர்களில் இருதய நோய் போன்ற நிரந்தர நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் தேவையைப் பொறுத்து 5000 ரூபா வரை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு...

தமிழ் மக்களின் அரசியல் பலத்தை பலவீனமாக்க தென்னிலங்கை சூழ்ச்சி

திட்டமிட்ட குடியேற்றத்தினால் தமிழர் சனத்தொகை வீதத்தினைக் குறைத்து, அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து எமது அரசியல் பலத்தை பலவீனப்படுத்தும் தென்னிலங்கையின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில் எமது வாக்குகளை முழுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கி தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதித்துவத்தை பலமாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன்...

தமிழ் தேசியத்திற்கு குரல்கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமையாகும் – யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

பதினைந்தாவது பாராளுமன்றத் தேர்தல் தமிழர்களுக்கு என்றுமில்லாதவாறு நெருக்கடி மிக்க தேர்தலாக உள்ளது. காரணம் அதிக எண்ணிக்கையான கட்சிகளும் வேட்பாளர்களும் வடக்கு கிழக்கில் தேர்தலுக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தமிழரின் பலத்தை உடைத்து அவர்களை உதிரியாக்கிமிதவாத அரசியல் பங்களிப்பையும் பலவீனப்படுத்துவதே அத்தகைய சக்திகளின் நோக்கமாகும்.அத்தகைய நோக்கத்தைமுறியடித்து தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவது தமிழ் மக்களின் கடமையாகும். இத் தேர்தலில் தமிழ்...

முன்னணி ஆதவாளர்கள் மீது உடுப்பிட்டி,கனகராஜன் குளம் பகுதிகளினில் தாக்குதல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளரொருவர் நேற்றிரவு உடுப்பிட்டி பகுதியினில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அதே வேளை கனகராயன் குளப்பகுதியினில் வைத்து மற்றுமிரு ஆதரவாளர்கள் வேட்பாளர் ஒருவரின் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு வடமராட்சி பகுதியினில் பிரச்சார நடவடிக்கைகளினை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியிருந்த அவரை அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் நபர்கள் தாக்கியுள்ளனர்.செயின் மற்றும் கூரிய...

தீவுப்பகுதிகளுக்கு வாக்குப் பெட்டிகளை கடற்படையினர் கொண்டுசெல்வர்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் தீவுப்பகுதிகளிலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், கடற்படையினரின் பாதுகாப்புடன் அவர்களின் படகுகள் மூலம் கொண்டு செல்லப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். 'எதிர்வரும் 16ஆம் திகதி காலை முதல் வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து பொலிஸ் பாதுகாப்புடன் நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு...

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரச அலுவலர் தொடர்பில் விசாரணை

தேர்தல் விதிமுறையை மீறி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரனுக்குச் சார்பாக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஈடுபட்ட சண்டிலிப்பாய் பிரதேச செயலக ஊழியர் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என யாழ். மாவட்ட செயலரும் தெரிவித்தாட்சி அலுவலருமான நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (11) சாவற்கட்டு பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல்...

ஊழல் மோசடிகாரர்களை தேசிய பட்டியலில் மூலம் பாராளுமன்றம் அனுப்ப வேண்டாம்

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவின்போது மோசடிகாரர்களுக்கு இடமளிக்கக் கூடாதென வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் இதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள், தேர்தல் சட்டத்தை மீறியோர், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளோர், சுற்றாடல் அழிவு ஏற்படுத்தியோர்,...

தமிழர்களின் அரசியல் பலம் மீண்டும் நிரூபிக்கப்பட வேண்டும்

தமிழர்களின் அரசியல் பலத்தை தமிழர்களாகிய நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலின் போதும் எமது அரசியல் பலத்தை மீண்டும் நாம் நிரூபித்துக்காட்ட வேண்டும் என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். கிளிநொச்சி, பூநகரி, வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக் கழகத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு...
Loading posts...

All posts loaded

No more posts