- Tuesday
- September 23rd, 2025

நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் கட்டாயமாக தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டுமென வலியுறுத்தும் 'கபே' அமைப்பு தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கு அதிகாலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை அக்கட்சியின் ஊடாகப் போட்டியிடும் ஊழலற்ற சிறந்த வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளை...

எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு பேஸ்புக் மற்றும் மின்னஞ்சல் ஊடாக தேர்தல் பரப்புரைகளைத் தவிர்க்குமாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். தேர்தலுக்கான பிரதான பரப்புரைகள் நிறைவடைந்துள்ள போதிலும், இணையத்தளம் ஊடான பரப்புரைகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கையடக்கத் தொலைபேசியூடாக குறுந்தகவல் மூலம் பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்...

ஐக்கிய தேசிய கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்று ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது இல்லத்தில் நேற்று பல்வேறு அமைப்புகளின் பிரதிநிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள பொதுத்...

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அறுவர், இந்தியாவின் மத்திய கல்கத்தா நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (14) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கைது செய்யப்பட்ட அறுவரும் இலங்கைத் தமிழர்கள் எனவும் இவர்கள் நான்கு நாட்களுக்கு முன்னரே சென்னையிலிருந்து கல்கத்தா நகருக்கு வந்துள்ளனர் எனவும் இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள...

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்காக, வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்காளிக்கச் செல்லும் வாக்காளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்களா என்பது குறித்து அதிகாரிகள் உறுதியாகவும் அவதானமாகவும் இருத்தல் அவசியம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று தெரிவித்துள்ளது. நாடாளாவிய ரீதியில் கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு தேர்தல் வன்முறைகளும் முறைக்கேடான தேர்தல் பிரசாரங்களும் இடம்பெற்றுள்ளதாக, உள்ளூர் கண்காணிப்பு குழுக்களின்...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் கட்சி உறுப்புரிமை தடை செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஜந்தாவது தடவையாக கொண்டாடப்படும் இந்த நிகழ்வில் இந்திய தேசிய கோடியை இந்திய துணை தூதுவர் நட்ராஜ் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில் இலங்கை வாழ் இந்திய பிரஜைகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக இணை மருத்துவ பீட மாணவி லோறன்ஸ் அனா எப்சிபா கடந்த மாதம் தீக்காயங்களுக்குள்ளாகி மரணமடைந்ததற்கு மருத்துவ பீட விரிவுரையாளர் ஞானகணேஸ் றஜித் (ஜெனா) என்பவர் மீது மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று முதல் தடவையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது மாணவியின்...

மலேசியாவில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் நேற்று கொழும்பக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கோலாலம்பூரில் வைத்து அவர் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 37 வயதான குறித்த நபர் கடந்த 2012ம் ஆண்டு சுற்றுலா வீசா மூலம் மலேசியாவிற்குள் பிரவேசித்துள்ளார்....

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் காணாமல் போனாரே தவிர உயிரிழக்கவில்லை. எனது தேசியத் தலைவரும் அவர்தான்.மக்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் இப்படித் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கான இறுதிப் பரப்புரைக் கூட்டம் நேற்று...

"வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதை கடந்த தேர்தல்களில் எமது மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல, சர்வதேச சமூகத்திற்கும் நிரூபித்துக்காட்டினர். இம்முறையும் அதனை எமது மக்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். எனினும், தீர்வை நாம் விரைவில் பெற மாபெரும் வெற்றி இம்முறை எமக்குத் தேவைப்படுகின்றது. இந்த வெற்றிச் செய்திக்காக சர்வதேச சமூகம்...

கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற 17 வயதுடைய எஸ்.சுமங்கலா என்ற சிறுமியே இதுவரை வீடு திரும்பவில்லை. காணாமல் போன தமது மகளை மீட்டுத்தருமாறு கோரி சிறுமியின் பெற்றோர், பளை...

தேர்தல் பிரசார மேடையில் குடும்ப விடயம் கதைக்கப்பட்டமையால் சம்பந்தப்பட்ட தரப்பினரால் குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்ட சம்பவம், வியாழக்கிழமை (13) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சியொன்றின் பிரசாரக் கூட்டம் யாழ்.நகரப்பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது, பிரசாரத்தில் ஈடுபட்டவர், இன்னொரு கட்சியைச் சேர்ந்த 50 வயதுடைய நபரொருவர் 21 வயதுடைய...

2018 ஆம் ஆண்டிற்குப் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு எஸ்பெஸ்டஸ் (asbestos) கூரைத்தகடுகளை இறக்குமதி செய்வதை முழுமையாக நிறுத்துவதற்கு அமைச்சரவையுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாட்டு மக்களின் சுகாதார ஆரோக்கிய நிலைமைகள் தொடர்பாகக் கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். ‘ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை நோக்கி’ என்ற...

மக்கள் தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதிநிதிகளை தெரிவு செய்த போதிலும் அவர்கள் இதுவரை காலமும் வெறும் பார்வையாளர்களாக மாத்திரமே செயற்பட்டு வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது....

யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் பெயரினை துஸ்பிரயோகம் செய்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அப்பட்டமான போக்கிலித் தனத்தை வெளிப்படுத்தி நிற்பதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய சூழல் தொடர்பினில் மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் தாயகம்.தேசியம்.சுயநிர்ணயமெனும் கோசங்களை வலியுறுத்தி ‘ பொங்குதமிழ்’ பிரகடனம் ஊடாக தமிழ் மக்களின் அங்கிகாரத்திற்காக யாழ் பல்கலைக்கழக...

தமிழ் தேசியத்தின் புதிய அரசியல் போராட்டப் பாதைக்காக வழிகாட்டும் மாற்றத்திற்கான அனைத்து தமிழ் மக்களும் ஒன்று திரண்டு வாக்களிக்க முன்வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 5 வருடமாக தமிழ் மக்களுடைய நலன்கள் அனைத்தினையும் திட்டமிட்டு புறக்கணித்து, மக்களை ஒவ்வொரு கட்டத்திலும் ஏமாற்றிய தலமைகளை...

ஒரே நாட்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் தமிழர்களது பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி கோரியுள்ளது. நாட்டில் ஒற்றையாட்சி ஒழிக்கப்பட்டு ஒரு கூட்டாட்சி வடிவில் இராஜ்ஜியங்களின் ஒன்றியம் சமஸ்டி முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசியல் இராஜதந்திர ரீதியில் தங்களுக்கு உள்ள ஜனநாயக பலம் சர்வதேச...

தேர்தல் சட்டம் மற்றும் தனது ஆலோசனைக்கு அமைய செயற்படாவிடின் அரச ஊடகங்களின் கழுத்துக்கு அருகில் வாள் வைக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தனியார் ஊடகங்களும் அவ்வாறு செயற்படாவிட்டால் அவர்களுக்கு தேர்தல் முடிவு வழங்கப்பட மாட்டாதென அவர் எச்சரித்துள்ளார். எனினும் வெவ்வேறு இணையத்தளங்களில் பரவும் கருத்துக்களை நிறுத்த தன்னால் முடியாது என...

All posts loaded
No more posts