இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வருகை தருவது தொடர்பில் புதிய ஆட்சிபீடத்தை எற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என வடமாகாண மீனவ சம்மேளன அமைப்பு தெரிவித்துள்ளது.
வடமாகாண மீனவ சம்மேளன அமையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட மீனவ கடற்றொழில் அமைப்புகளின் தலைவர்களுடான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.
யாழ் நீரியல் வளத் திணைக்களத்தில் யாழ் மாவட்ட மீனவ சம்மேளனத் தலைவர் எமிலியம் பிள்ளை தலைமையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
கடந்த காலங்களில் மீனவர்கள் பல கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் வளங்களும் சூறையாடப்பட்டுள்ளன.
இதற்கு இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளின் ஒரு இனக்கமான ஒற்றுமையின் கீழ் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.