உதவிய மாணவியின் மீது ஆசிரியர் தாக்குதல்

புத்தூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர், மாணவியின் கன்னத்தில் அறைந்தமையினால் மயக்கமுற்ற மாணவி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்று பாடப்புத்தகம் கொண்டு வராத மாணவிக்கு தனது புத்தகத்தை மாற்றிக் கொடுத்து உதவியமையை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவியின் கன்னத்தில் கடுமையாக பலமுறை அறைந்துள்ளதாக மேற்படி மாணவி தெரிவித்துள்ளார்.

தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts