- Tuesday
- September 23rd, 2025

யாழ்.தேர்தல் மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யப்போகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவரம் வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 5 உறுப்பினர்கள் 1. சி.சிறீதரன் 2. மாவை.சேனாதிராசா 3. த. சித்தார்த்தன் 4. எம்.ஏ. சுமந்திரன் 5. ஈ.சரவணபவான் 5வது இடம் நீண்ட இழுபறியின் பின் சரவணபவானுக்கு வழங்கப்பட்டது...

பருத்திதுறையிலிருந்து நெல்லியடியூடாக யாழ்ப்பாணம் போகும் AB20 பிரதான வீதியில், இமயானனுக்கு அருகில், வல்லைவெளியை அணுகும் முடக்கில், மிகமிக அண்மையில், விடுதியுடன் கூடிய மதுபானசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கு அண்மைக்காலத்தில் பல மோட்டார் விபத்துக்களையும் உயிர் பலிகளையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சுழலில் மதுபானக்கடை திறந்த வைத்திருப்பது மனித உயிர்களுக்கு விடுக்கப்பட்ட சவால். போரபத்தை விலைக்கு...

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 15ம் நாடாளுமன்றின் பிரதமராக பதவிப்...

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதுவித ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை கேலி செய்யும், அக்கட்சியின் சின்னமான சைக்கிளை மரமொன்றில் தூக்கிலிட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக போட்டியுள்ள கட்சியாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, எவ்வித ஆசனங்களையும்...

15ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் தோல்வியடைந்துள்ளதை ஏற்றுக் கொள்வதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக, ஏ.எஃப்.பி செய்திச் சேவை தெரிவிக்கின்றது. இந்தத் தேர்தலில் ஐ.ம.சு.கூ அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதனாலேயே அவர் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது. "பிரதமராக வருவது என்ற என்னுடைய...

இலங்கையின் வரலாற்றில் நீதியான மற்றும் அமைதியான தேர்தல் ஒன்று இம்முறை நடைபெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 1947ம் ஆண்டில் இருந்து இதுவரை இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இன்று (நேற்று) இடம்பெற்ற தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 8ம் திகதி இடம்பெற்ற தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் இடம்பெற்ற தேர்தல்களை இன்றைய...

தேர்தல் வாக்களிப்பின் போது தனது வாக்குச் சீட்டை, சட்டவிரோதமான முறையில் புகைப்படம் எடுத்த நபர் ஒருவரைக் இன்று காலை (17) கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ லுனவில பௌத்த கனிஷ்ட வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வைத்து, லுனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர்...

8ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடைபெற்று வருவதுடன் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இன்று இரவு 6.30 மணியளவில் வெளியிடுவதற்கு முயற்சி செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 4.00 மணியுடன் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் மாலை 4.30 மணியளவில் தபால் வாக்குகளை எண்ணும் பணிகள்...

தமிழர்களது தேசிய அரசியலைப்பொறுத்தமட்டில் இத்தேர்தல் ஒரு திருப்புமுனை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.இன்று(17)யாழ்ப்பாணத்திலுள்ள வக்களிப்பு நிலையத்தில் தமது வாக்கை செலுத்திவிட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எமது நிலைப்பாட்டை நாம் வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் எமது...

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தேர்தல் தினமான இன்று (17) ஆம் திகதியும் தத்தம் தபால் நிலையங்களுக்கு சென்று தம்முடைய வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாமென தபால் மா அதிபர் டீ. எல். பீ. ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சகல தபால் நிலையங்களும் வாக்காளர் அட்டைகளை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளவதற்காக நேற்று (16) ஞாயிற்றுக்கிழமையும் மாலை...

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் தினத்தன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழில் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட இருந்த வீட்டு சமையல் உபகரண பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளன என தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். அளவெட்டி, கும்பிளாவளை பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாக உள்ள வீடொன்றில் இருந்தே குறித்த பொருட்கள் ஞாயிற்றுக்கிழமை (16) மீட்கப்பட்டுள்ளன. குறித்த பொருட்கள் பெரியளவிலான 24 பெட்டிகளில் அடைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்க என பதுக்கி...

வாக்களிப்பது மக்களின் உரிமை மற்றும் அவர்களுடைய பொறுப்பாகும். வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்காமல் வாக்களிப்பு நிலையத்துக்கு அச்சமின்றி சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சகல வாக்காளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். போதை மற்றும் வன்முறைகள் இன்றி செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டங்களை உருவாக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்கின்ற இந்த தேர்தலில் சட்டத்தை மீறுகின்ற சம்பவங்கள் இடம்பெறுமாயின், சட்டத்தை...

யாழ்ப்பாணத்திற்கும் அம்பாறைக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது நேற்றிரவு இனம்தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் மேற்கொண்டனர். பலாலி வீதியில் திருநெல்வேலி சந்தைக்கு அருகாமையில் நேற்றிரவு 8.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே பேருந்து மீது கல்வீசி தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளதாக தாக்குதலுக்கு இலக்கான...

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. வாக்காளர்கள் இன்று மாலை 04.00 மணி வரை தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் பொருட்டு வாக்களிக்க முடியும். உரிய நேரத்தில் சரியான ஆவணங்களுடன் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகை தருமாறு, தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இம்முறை தேர்தலில் வாக்களிக்க ஒருகோடியே 50 இலட்சத்து 44,490...

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் மின்சார வேலை செய்துகொண்டிருந்துள்ளார். அந்த வேலையின் போது மின்சாரம் தாக்கி...

யாழ்.மார்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சியின் அலுவலகம் மீது நேற்றிரவு 11.20 மணிக்கு இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி முகவர்களுக்கான செயற்பாடுகளை கட்சி தொண்டர்கள் மேற்கொண்டு இருந்த போதே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. வேட்பாளரும், சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தாவின் அலுவலகம் மீதும் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலினால் எவருக்கும் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என்பது...

இறுதிக்கட்ட நேரத்திலும், தேர்தல் வன்முறைகளுக்கு இடமே கொடுக்காத வகையில் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு பிணை வழங்க முடியாது என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்தார். 87 கிலோ கஞ்சா உடைமையில் வைத்திருந்தபோது கைது செய்யப்பட்ட ஒருவருக்கான பிணை கோரி விண்ணப்பிக்கப்பட்ட பிணை மனு வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் இவ்வாறுதெரிவித்துள்ளார். தேர்தல் வன்முறைகளற்ற அல்லது தேர்தல் வன்முறைகள் குறைந்த மாவட்டங்களாக...

மீசாலை – புத்தூர் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 03.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது....

அமைதியான- நீதியான தேர்தலை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான...

All posts loaded
No more posts