Ad Widget

பொது வேட்பாளர் தெரிவுக்கு வைபரே உதவியது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வகித்த வகிபாகம் அளப்பரியதாகும்.

தன்னை பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது மாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போது சிலவிடயங்களை அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இதுதொடர்பில் மற்றுமொரு இரகசியத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பிலான இரகசிய பேச்சுவார்த்தைக்கு அதியுயர் தொழில்நுட்பத்துடன் கூடிய செய்மதி தொலைகாட்டி பயன்படுத்தப்பட்டதாக இந்தியாவிலிருந்து அறிக்கையிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையை சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் தெளிவுப்படுத்துகையில், நாங்கள் பயன்படுத்திய வைபர். வைபரை ஒட்டுக்கேட்கும் முறைமை தொடர்பில் அன்றைய அரசாங்கம் தெரிந்திருக்கவில்லை. அதேபோல, அவற்றை ஒட்டுக்கேட்பது என்பது புலனாய்வு பிரிவினருக்கு பெரும் சிரமமான விடயமாகும். எனினும் சில நேரங்களில் யார், யாருடன் கதைக்கின்றார் என்பதை இனங்கண்டு கொள்ளமுடியும் எனினும், அவ்வாறான தொழில்நுட்பம் அன்று இலங்கையில் இருக்கவில்லை என்றார்.

Related Posts