Ad Widget

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் கூட்டமைப்பின் தலைவர்களைத் தடுக்க என்ன வழி – ஈ.பி.டி.பி. கேள்வி!

வடக்கில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பதானது வரவேற்கத்தக்கது. அதேநேரம், போதைப் பொருள் பாவனையைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு செயற்திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்கது. அத்துடன், போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதாக பல்வேறு...

மனை­வியை அடித்து துன்­பு­றுத்­திய கண­வனை கடித்துக்குத­றிய நாய்

கண­வரால், மனைவி அடித்து துன்­பு­றுத்­தப்­பட்­டதைப் பார்த்து கொண்­டி­ருந்த வளர் ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவே­ச­மாகப் பாய்ந்து கடித்து குத­றிய சம்­பவம் ஒன்று கம்­ப­ளையில் இடம்­பெற்­றுள்­ளது. வளர்ப்பு நாயின் கடிக்கு உள்­ளான நபர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார். குறித்த நப ரின் உடலில் 35 இடங்­களில் நாய் கடித்­துக்­கு­த­றிய காயங்­க­ளுடன் கீறல்...
Ad Widget

அச்சுவேலி ஈ.பி.டி.பி அமைப்பாளர் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

அச்சுவேலி ஈ.பி.டி.பி அமைப்பாளர் தர்மராஜா வயது 60 என்பவர் தனது வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தைப் பார்வையிட்ட நீதவான் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளார். ஈ.பி.டி.பியின் நீண்ட கால உறுப்பினராக இருந்த இவர் அச்சுவேலிப் பொறுப்பாளராகவும் கடமையாற்றி வந்ததுடன் வலி.வடக்கு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்...

நீதிமன்ற தாக்குதல் 15 பேரிற்கு பிணை ஏனையோரிற்கு விளக்கமறியல் நீடிப்பு

வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 15 பள்ளி மாணவர்களை கடும் எச்சரிக்கையுடன் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி...

வடக்கு மாகாணத்தில் முதலமைச்சர் நிதியத்தை உருவாக்க ஜனாதிபதி ஒப்புதல்!

வட மாகாண சபையைப் புறக்கணித்து, வடக்கின் அபிவிருத்திக்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தனியாக தெற்கிற்கு அழைத்து நிதி உதவி வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரடியாகச் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாண முதலமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டு தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் கூறிய ஜனாதிபதி,...

கலாசார சீரழிகள் தொடர்பில் இளைய சமுதாயதுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்

கடந்த காலத்தில் மாயவலை விரித்து ஆடம்பரங்களையும் கட்டற்ற கலாசாரத்தை சீரழிக்கும் விடயங்களையும் பரவவிட்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பின் அறுவடைகளை நாம் இன்று அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக எமது இளைய சமுதாயத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சி...

வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள்; வடக்கு அவையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஆட்சேபம்

வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர். வடக்குமாகாண சபையின் 30 ஆவது அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இதன்போதே இந்த ஆட்சேபனையினை வெளியிட்டனர். வவுனியா அரச அதிபர்...

ரயில் விபத்தில் யாழில் ஒருவர் பலி

இன்று காலை கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 55 என்பரே ஸ்தலத்திலேயே உயிரிழந்தவராவார். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் போலீசார் மேற்கொண்டு வருவதாகவும் சடலமானது யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்பள்ளி நியதிச்சட்டம் சபையில் சமர்ப்பிப்பு

வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சின் 2015 ஆம் ஆண்டுக்கான முன்பள்ளி நியதிச்சட்டம் சற்றுமுன்னர் சகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த அமர்வு இன்று நடைபெற்று வரும் நிலையில் கல்வி அமைச்சர் குருகுலராசாவினால் முன்பள்ளி நியதிச்சட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சபை குழுநிலைக்கு மாறி விவாதம் இடம்பெற்று வருகின்றது.

மாணவர்களே அவதானம்! விழிப்பாக இருக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது : யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வூட்லர்

யாழ்.மாவட்டத்தில் ஏற்படும் சமூக சீரழிவுகள் தொடர்பாக மாணவர்களை விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு ஒன்று யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தால் பாடசாலை மட்டத்தால் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்திட்டம் ஒன்று இன்று ஆரம்பமாகி செயற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக இன்று யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலையில் குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கிற்கு யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக...

துன்னாலையில் ஒரு வாரமாக தொடரும் வாள்வெட்டு: ஐவர் வைத்தியசாலையில்

யாழ். துன்னாலைப் குடவத்தை பகுதியில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி முதல் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான மோதல் காரணமாக, இது வரையிலும் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் நேற்று திங்கட்கிழமை (08) தெரிவித்தனர். இந்த விடயம் தொடர்பாக மேலும்...

பனை மரங்களின்அழிப்பை தடுக்க உடன் நடவடிக்கை தேவை – டக்ளஸ்

வடக்கு மாகாணத்தில் பனை மரங்கள் பாரியளவில் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. எனவே, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும் பனங் கன்றுகளை அதிகளவில் நடுகை செய்வதற்கும் பனை அபிவிருத்தி சபை உடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த...

வடக்கிலிருந்து இராணுவம் வௌியேற வேண்டும் – வட மாகாண முதலமைச்சர்

வடக்கில் இருந்து இராணுவத்தினர் வெளியேறுவதையே தாம் விரும்புவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோன் அமரதுங்கவுடன் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் இன்னும் 150,000 இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாகவும் அதாவது ஐந்து அல்லது ஆறு பேருக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் காணப்படுவதாகவும் வட மாகாண முதலமைச்சர்...

புது தேர்தல் முறை அறிமுகம்: அடுத்த தேர்தல் பழைய முறைப்படியே நடைபெறும்

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கான நடைமுறையை மாற்றியமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனினும் அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தற்போதுள்ள நடைமுறையின் கீழேயே நடைபெறும் என்று வெளியுறவுத் துறை பதில் அமைச்சர் அஜித் பி பெரேரா உறுதிப்படுத்தினார். புதிய தேர்தல் நடைமுறையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எவ்வித மாறுதலும் இராது. அந்த எண்ணிக்கை 225 ஆகவே இருக்கும்....

விநாயகபுரம் விவசாயிகள் கூட்டுறவுச்சங்கத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசனினால் திறந்து வைக்கப்பட்டது

கொலைகள், பாலியல் துஷ்பிரயோகம், போதைப் பொருள் நிறைந்து கிடக்கும் வடக்கு கிழக்கு – மாவை

வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமன்றி பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்டவையும் நிறைந்து காணப்படுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்த சமூகசேவை உத்தியோகஸ்தர் சச்சிதானந்தம் மதிதாயன் (வயது 44) மண்டூரிலுள்ள அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதோரினால் கடந்த 26ஆம் திகதி...

இல்லாதவர்கள் மீது பழி சுமத்தி குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் இருந்து தப்பிக்க வேண்டாம்!

இல்லாதவர்களைக் குற்றவாளிகள் ஆக்கி வடக்கில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதில் இருந்து விலகிச் செல்ல முயற்சிக்க வேண்டாம். - இவ்வாறு போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்குச் சுட்டிக் காட்டியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன். வடக்கில் போதைப் பொருள் பாவனை, அதனூடான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஒன்று...

நீதிமன்றத்தை தாக்கியதாக வீடியோவில் ஆதாரம்; மூவரை ஆஜர்ப்படுத்தியது பொலிஸ்

நீதிமன்றம் தாக்கப்பட்டமை தொடர்பில் 130 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் மேலும் பலர் தொடர்ந்தும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் நேற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அத்துடன் குறித்த மூவரும் நீதிமன்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன...

நீதிமன்றம் தாக்குதல்; 34 பேருக்கு இன்று பிணை, இந்திய பிரஜைக்கு விடுதலை!

வித்தியாவின் படுகொலையினை அடுத்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் நீதிமன்றம் தாக்கப்பட்டமை உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 130 பேரில் 34 பேரை கடும் நிபத்தனையில் பிணையில் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்டமையினைத் தொடர்ந்து கடந்த 20 ஆம் திகதி பல்வேறு...

ஆனைக்கோட்டையில் பஸ் மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள ஆனைக்கோட்டை மதவடியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலையில் காக்கைதீவு கடலில் மீன்பிடித் தொழிலுக்கு சென்றுவிட்டு அதிகாலை 5.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் பின்னால் வந்த தனியார் பஸ் மோதியதில் இந்த விபத்து...
Loading posts...

All posts loaded

No more posts