- Thursday
- November 20th, 2025
வவுனியா, குருமண்காட்டில் பெண்களுடன் கீழ்தரமாக நடக்க முற்பட்ட ரவுடிக் கும்பலை தப்பியோட விட்டு பொலிஸார் வேடிக்கை பார்த்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியா, நெடுங்கேணியில் இருந்து வந்த தந்தை இரு புதல்வர்கள் மற்றும் 4 சகோதரிகள் குருக்கள் புதுக்குளத்தில் உள்ள தமது வீட்டிற்கு செல்வதற்காக குருமண்காட்டில்...
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலைத் தடுக்கமுனையும் இனவாதிகளின் முயற்சிகளுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள் முன்னணியின் உப செயலாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன். தேர்தலில் பின்னடைவு கண்ட தமிழருக்கு எதிரான இனவாதிகள், நாட்டில் இரத்த ஆறு ஓடும் எனக் கடுமையான தொனியில் இனவாதத்தை விஷமாக வெளியிடுகின்றனர். இதற்கு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை நடைபெற்றால் புலத்தில் வாழும் எம் சொந்தங்களையும் ஈழத்தில் வாழும் தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து சர்வதேச ரீதியில் பெரும் போராட்டங்களை முன்னெடுக்க எண்ணியுள்ளோம். - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரும் வன்னி மாவட்ட...
இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் மன்னார் நகரில் நேற்று ஞாயிறன்று கூடி தங்களின் உறவுகளை கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். ஆட்கள் காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரரன சர்வதேச தினத்தை ஒட்டி இந்த நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட் தந்தை ஜெபமாலையின் தலைமையில் நடைபெற்றது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காணாமல்...
முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புப்பகுதியில் உள்ள குருந்தூர் மலையில் அமைந்திருக்கும் வைரவர் ஆலயத்தில் 33 வருடங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் சனிக்கிழமை (29.08.2015) வழிபாடு இடம்பெற்றுள்ளது. ஊரவர்களால் 'ஜயன்' என்று அழைக்கப்படும் இந்த வைரவர் ஆலயத்தில் இடம்பெற்ற இவ்விசேட மடைப்பொங்கல் நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர் க. சிவநேசன் ஆகியோரும்...
இனப்பிரச்சினைக்கு சமஸ்டி மூலமே தீர்வு காண முடியும் என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகாது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். ஆண் ஆதிக்க கட்சியாக வர்ணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று தேசியப்பட்டியலில் பெண் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளது....
புதிய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு மசாஜ் சேவை சேவை வழங்கப்பட உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் ஒன்றாக மசாஜ் பார்லர் சேவை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் ஆயுர்வேத முறையிலான மசாஜ் வழங்கப்பட உள்ளது. ஆயுர்வேத திணைக்களத்தினால் நிர்வாகம் செய்யப்படும் ஹெலவெத புனருத என்னும் நிறுவனம் இந்த சேவையை வழங்க உள்ளது. தலை, கால் மற்றும்...
நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்புரிமைகள் வழங்கப்படுகிறது. அவற்றில் சில... நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாதச் சம்பளம் 54 ஆயிரத்து 525 ரூபாவாகும். அமைச்சர் ஒருவரின் சம்பளம் 65 ஆயிரம் ரூபாவாகும். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் கொடுப்பனவுகள். அடிப்படைச் சம்பளம் – 54,525 போக்குவரத்து கொடுப்பனவு-10,000 உபசரிப்பு கொடுப்பனவு -1,000 செல்போன் கொடுப்பனவு...
இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமான 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையின் செயற்பாடுகள் நோயாளர்களை மேலும் நோய்களுக்கு உள்ளாக்குகின்றன எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் இந்த விடயத்தில் வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் அசட்டையாகவே செயற்படுவதாகவும் மக்கள் சாடியுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுவோரில் பெரும்பாலானவர்கள் உணவுக்காக வைத்தியசாலை வளாகத்துக்குள் இருக்கும் இந்த சிற்றுண்டிச்சாலையையே நம்பியுள்ளனர். ஆனால் இந்த உணவு...
இன்று (30) சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களை கண்டறிவதில் சிலவேளை காலதாமதம் ஏற்படலாம் என்பதனாலும் அவர்களின் குடும்பத்தினருக்கு சரியான பதில் ஒன்றை வழங்குவதற்கு முடியாமல்...
நடந்து முடிந்த தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசு கட்சியே எதிர்க்கட்சிகளில் இப்போது கூடியளவு ஆசனங்களுள்ள அரசியல் கட்சியாக பாராளுமன்றத்தில் இருக்கின்றது. தேசிய இனப்பிரச்சினைத் தீர்வை எட்ட அரசாங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் உண்மையான உறுதி இருந்தால், தமிழ் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க...
மோட்டார் சைக்கிள் மற்றும் வாகனங்களைச் செலுத்துவதற்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் திணைக்களங்கள் அதனைப் பெறுபவர்களின் தராதரத்தைப் பரிசீலனை செய்ய வேண்டும்.அவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறவுள்ளவர்கள் அதனைப் பெறுவதற்கு ஏற்றதாகப் போக்குவரத்து விதிமுறை பற்றிய பூரண அறிவை பெற்றுள்ளாரா என்பதை அவதானித்து உறுதிப்படுத்திய பின்னரே அனுமதிப்பத்திரத்தை வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்...
யாழ்.மாவட்டத்தில் திடீரென அதிகரித்துள்ள விபத்துக்களால், கடந்த இரண்டரை மாதங்களில் மாத்திரம் 48 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையிலும் 700 பேர் தலை அடிபட்டுப் பாதித்த நிலையிலும் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் 10 ஆம் திகதியிலிருந்து கடந்த 23 ஆம்...
மன்னார், மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்றை நேற்று வெள்ளிக்கிழமை(28) மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 26ஆம் திகதி மாலை 3 மணியளவில் மன்னார் நீதவான் முன்னிலையில் கிணறு அடையாளம் காணப்பட்டது. இதன்போது, காணாமல் போனவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான நிரஞ்சன்...
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவதால் மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது. தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு உரிய இடங்கள் வழங்கப்பட்டால்தான் இது தேசிய அல்லது தேசிய ஐக்கிய அரசாங்கமாக முடியும். இதேபோல் எப்பாடுபட்டாவது அமைச்சுப் பதவிகளை கைப்பற்றிக்கொள்வது என்பது தேசிய அரசாங்கத்தின் முன்னுரிமை பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. இது தேசிய...
உள்நாட்டு விசாரணையினை நிராகரிப்பதுடன், சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி போராட்டத்தினை முன்னெடுக்க ஈழத் தமிழ் மக்கள் அனைவரும் ஆதரவு வழங்குமாறு வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவின் உதவி இராஜாங்க...
இலங்கையில் போர்க்கால குற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கு நடக்கக்கூடிய உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் சற்றும் நம்பிக்கை இல்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் விசாரணை ஆணைக்குழுக்களில் ஆஜராகி வாதிட்டு வந்துள்ள மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ரட்ணவேல் கூறுகின்றார்.கடந்த கால அனுபவங்களே இந்த நிலைப்பாட்டுக்கு காரணம் என்றும் பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார். இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும்...
இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான ஆலோசகர் மரிக்கோ யமமொடோ, வியாழக்கிழமை (27) யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டு, வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். மீளக்குடியமர்ந்த மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மீள்குடியமர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அரச உதவிகள், முகாம்களில் எவ்வளவு காலம் இருந்தமை என்பது தொடர்பிலும்...
வடமாகாண கால்நடை அமைச்சின் 'தகர்' திட்டத்தின் மூலம் நல்லூரைச் சேர்ந்த 30 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் நேற்று வியாழக்கிழமை (27.08.2015) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 'தகர்' என்பது ஆடுகளைக் குறிக்கும் பழந்தமிழ்ப் பெயர் ஆகும். இதனைப் பெயராகக் கொண்டு 'தகர் வளர் துயர் தகர்' என்ற தொனிப்பொருளில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்...
Loading posts...
All posts loaded
No more posts
