- Tuesday
- September 23rd, 2025

நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவக்கும் மக்கள் சந்திப்பு வட்டுக்கோட்டைத் தொகுதியில் குக்கிராமம் ஒன்றில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் அவர்கள் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவாக தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்ட கட்சியின் ஒரு தொகுதி செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (22) வடமராட்சியில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி சந்திப்பில் கட்சியின் முக்கியஸ்த்தர்களான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்...

மேசன் வேலைக்குச் சென்ற எனது மகன் இன்றுவரை வீடு திரும்பிவரவில்லை என தாயார் ஒருவர் கண்ணீர் சிந்தியவாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். வடிவேல் சிவகுமார் என்ற 27 வயதான எனது மகன், கடந்த 2007.11.09 அன்று எமது வீட்டிலிருந்து காத்தான்குடிக்கு மேசன் வேலைக்காகச் சென்றார். அவர் இன்றுவரை வீடு வந்து சேரவில்லை.அவர் வேலைக்குச் சென்ற இடத்திலும்,...

நீர்வேலி, வாய்காற்றரவை பிள்ளையார் ஆலய பூசகர்களினால் பாரியளவு நிதி மோசடி இடம்பெறுவது தொடர்பாக கோப்பாய் பிரதேச செயலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பழமை வாய்ந்த ஆலயமான வாய்காற்றரவை பிள்ளையார் கோயில் பொதுமக்களுக்கு உரிய ஆலயமாக காணப்படினும் இங்கு பூசை செய்யும் பூசகர்கள் மூவர் தமது பெயர்களுக்கு வெளிப்படுத்தல் உறுதி மூலம் முகாமைத்துவ...

எமது புதிய அரசாங்கம் இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படாமல் இருக்கும் விதத்திலேயே ஆட்சி செய்கிறது எனத் தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்று சம்பூரில் மக்களின் காணிகளை கையளிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றிருந்தார். இதன்போது அவர் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில் யுத்தம் சத்தியத்தை இல்லாமல்...

பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் மீனவர்களின் வலையில் சடலம் ஒன்று சிக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கற்கோவளம் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் இந்தச் சடலம் அகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை அடையாளம் காண்பதற்காக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுமுன்தினம் (22) கையளிக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் பின்னர் கடந்த அரசினால் விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக முதலீட்டுச்சபைக்கு கையளிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியை புதிய அரசு மீண்டும் அரசுடையாக்கி மீண்டும் ஆரம்ப உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. அந்த காணிகளுக்கான காணி உறுதிகளே ஜனாதிபதியினால்...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் தெரிவுக்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஒன்று திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு முதல் இரண்டரை வருடம் என்றும் பின்னர் சாவகச்சேரி க.அருந்தவபாலனுக்கு இரண்டரை வருடம் எனவும் , மற்றையது திருகோணமலை திரு. க. துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு என்றும் கூட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்து வெளிவந்த இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன ....

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களை தீர்மானிக்கும் உயர்மட்ட கலந்துரையாடல் தற்பொழுது திருகோணமலையில் நடந்து கொண்டிருக்கிறது. இதுவரையான கலந்துரையாடல்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பெண் வேட்பாளரான சாந்தி சிறிஸ்கந்தராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மற்றவரை தேர்வு செய்யும் கலந்துரையாடல் தொடர்ந்து நடந்து வருகிறது. அதுபெரும்பாலும் கிழக்கு மாகாணத்திற்கே வழங்கப்படும் என எதிர்பார்க்கபப்டுகின்றது .

யாழ்.நகர் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளிலிருந்து இரு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனித்து வசித்து வரும் இவருக்கு இன்று சனிக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக அவரது மருமகன் அங்கு சென்ற போது வீட்டில் எரிந்த நிலையில் மூதாட்டியின்...

நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் போது வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி விட்டு செல்லுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார். தற்போது நல்லூர் திருவிழாக் காலம் ஆரம்பித்து உள்ளமையால் இந்துக்கள் அனைவரும் கோயில்களுக்கு சென்று வருவது வழமை. இரவு,பகல் மற்றும் அதிகாலை என பல நேரங்களில் கோவில் களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது வீட்டில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, தேசிய பட்டியல்...

இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதி கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய றோலர் படகுகளைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கையை இலங்கை மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என இலங்கை கடலுணவுகள் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்தது. அந்தச் சங்கத்தின் கடலுணவு ஆய்வாளர் ஸ்ரீவ்...

நாளையதினம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னரே பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை 2,907 பரீட்சை நிலையங்கiளில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் 3,400,930 மாணவர்கள் பரீட்சைக்கு எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் போது ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின்...

காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென மரணமானான். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது - கடந்த 18ஆம் திகதி காய்ச்சல் காரணமாக இந்தச் சிறுவன் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தான். காய்ச்சல் மாறாத நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் காய்ச்சல்...

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும், அவர்கள் தலைமையில் உருவாகும் தேசிய அரசும் நாட்டின் நல்லாட்சிக்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும். அத்துடன், நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தாமதமின்றி உடன் தீர்வைக் காணவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிபூரண ஆதரவை - ஒத்துழைப்பை வழங்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

பனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வரையிலான இலகு கடன் வசதியும் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வசதியையும் வழங்குவதற்கு பனை அபிவிருத்திச் சபை முன்வந்துள்ளது. பனம் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு பாவனைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்யும்...

மனிதரொருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலை நேர மற்றும் உடல் நலத் தரவுகளை ஆராயும் போது வாரத்திற்கு 55 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை...

ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்து இணக்கப்பாட்டு அரசு ஒன்றினை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது . அதன்போது அமைச்சரவை இருபுறமும் பகிரப்பட வாய்ப்புள்ளது.எதிர்க்கட்சிக்குரிய அந்தஸ்தினை 3வது பெரிய கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள...

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வடமாகாணசபையின் உறுப்பினரும் இந்த தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரான அங்கஜன் இராமநாதன் பாராளுமன்ற உறுப்பினராகின்றார். சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜிதமுனி சொய்சா, எஸ்.பி. திஸாநாயக்க, மகிந்த சமரசிங்க, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, திலங்க...

All posts loaded
No more posts