Ad Widget

கரையோரப்பகுதிகளை சுத்தம் செய்ய முன்வருமாறு அரச அதிபர் அழைப்பு

சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் எதிர்வரும் 21 ஆம் திகதி அனுட்டிக்கப்படுகின்றது. கரையோரப்பகுதிகளை சுத்தம் செய்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் தெரிவித்தார்.

யாழில் சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முப்படை மற்றும், பொலிஸ், பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய, சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்தினை முன்னிட்டு, கரையோரத்தினை சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி கரையோர சுத்திகரிப்பு சுத்திகரிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள் இந்த சுத்தம் செய்யும் செயற்பாட்டினை முன்னெடுக்கவுள்ளனர்.

இந்த செயற்பாட்டில் அனைத்து அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்கு பற்றுவதுடன், முப்படையினர் மற்றும், பொலிஸ், பாடசாலை மாணவர்கள், அனைவரும் இணைந்து இத்திட்டத்தினை வெற்றியடைய செய்ய வேண்டுமென்பதே நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts