Ad Widget

வடக்கில் வனஜீவராசிகள் வனாந்தரங்களுக்கு பெயரிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

வடமாகாணத்தில் உள்ள வனஜீவராசிகள் வனாந்தரங்கள் 16 யையும் பெயரிடுமாறு ஜனாதிபதியும் சுற்றாடல்துறை அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவிடம் சூழலியலாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த பெயரிடும் நடவடிக்கை கடந்த மூன்று வருடங்களாக தாமதமாகியுள்ளதாகவும் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொருளாதார அமைச்சின் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இந்த வனஜீவராசிகள் வனாந்தரத்தை பெயரிடமுடியாத நிலைமை என்பட்டதாகவும் அவர்கள், ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

ஐ.நா அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நிதியுதவின் கீழ் 2001ஆம் ஆண்டு மே மாதம் தயாரிக்கப்பட்ட வட மாகாண ஒருங்கிணைந்த மூலோபாய சுற்றுச்சூழல் மதிப்பீடுகளின் பிரகாரம் அங்கு வனஜீவராசிகள் வனாந்தரங்கள் 16 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் வனாந்தரங்களை பெயரிடுவதன் ஊடாக யானை-மனிதன் மோதலை கட்டுப்படுத்த முடியும் என்பது வடமாகாணத்தில் இருக்கின்ற வனவிலங்கு வாழ்விடங்களை பாதுகாக்கமுடியும் என்றும் சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Posts