வவுனியா நகரசபை பெண் அதிகாரியை பலர் முன்னிலையில் கெட்டவார்த்தைகளால் பேசிய உள்ளூராட்சி ஆணையாளர்!

நகரசபையின் சம்பள பிரச்சனையை சீர்செய்த பெண் அதிகாரியை அரசியல்வாதிகளுடன் கீழ்த்தரமாக நடந்தாக தெரிவித்து கெட்டவார்த்தைகளால் பேசியமையால் இறப்பதை தவிர வேறு வழி தனக்கு தெரியவில்லை என வவுனியா நகரசபையின் பெண் அதிகாரி ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

vavuniya

இச் சம்பவம் தொடர்பாக அப் பெண் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

சுகாதார திணைக்களத்தில் 13 வருடமாக பணியாற்றிய நான் நகரசபைக்கு அண்மையில் இடமாற்றம் பெற்று வந்திருந்தேன். எனக்கு பிரதம முகாமைத்துவ உதவியாளர் பதவி அங்கு தரப்பட்டிருந்தது.

இதன் போது நகரசபை செயலாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர், நகரசபை நிர்வாக உத்தியோகத்தர் எல்லோரும் சேர்ந்து நகரசபை சிற்றூழியர்களின் சம்பளம் பிரச்சனையாக உள்ளது. எனவே அதனை நீங்கள் பார்க்குமாறு எனக்கு பணி தரப்பட்டிருந்தது.

அதனை நான் ஆராய்ந்த போது அனைவருக்கும் எடுக்கப்பட்ட சம்பளத்தினை குறைத்து செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.

அவ்வேளையில் பிரதம செயலாளாரிடமிருந்து கடிதம் வந்திருந்தது ‘ஒருவர் எடுத்த சம்பளத்தை குறைக்க கூடாது’ என. அதன்படி அவ் ஆவணங்களை வைத்து செயலாளருடன் கதைத்து உள்ளூராட்சி ஆணையாளரால் வந்திருந்த சேவைக்கால அறிக்கையையும் வைத்து 2004 சம்பள மாற்று வீதத்தையும் வைத்து அவர்களின் சம்பளத்தை குறைக்காமல் செய்து கொடுத்திருந்தேன்.

அதன் பின்னர் நிர்வாக உத்தியோகத்தர் சரிபார்த்து செயலாளர் அங்கீகாரம் செய்து கணக்காளரிடம் கொடுத்த போது இவ்வாறு சம்பளம் கொடுக்க முடியாது. இவ்வாறு செய்வது பிழை என தெரிவித்தார்.

இதன்போது நான் இல்லை இது சரி என வாதாடியிருந்தேன். அவர்கள் அவ்வாறு கொடுக்க முடியாது என்று மீண்டும் தெரிவித்தார். இதனால் நான் அவ் விடயத்தை கைவிட்டேன்.

அதன் பின்னர் உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து நிர்வாக உத்தியோகத்தர் உட்பட மூன்று பேர் கொண்ட குழுவொன்று வந்து வேறு சுற்றுநிருபம் அனுப்புகின்றோம் அதன் பிரகாரம் சம்பள வேலையை செய்யுமாறு தெரிவித்தார்கள்.

இதனையடுத்து இரண்டு வாரத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை 11 மணிக்கு பின்னர் தொலைநகலில் சுற்றுநிருபம் வந்திருந்தது. எனினும் நான் விடுமுறையில் சென்றிருந்தேன். இவ் வேளையில் சிற்றூழியர்கள் 7 ஆம் திகதியில் இருந்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நான் அறிந்திருக்கவில்லை.

இந் நிலையில் நேற்று காலை நிர்வாக உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு என்னை வருமாறு அழைத்திருந்தார். அவரின் பணிப்புரைக்கமைய எனது விடுமுறையை இரத்து செய்து அலுவலகத்திற்கு சென்று சுற்றுநிருபத்தை வாசித்துக் கொண்டிருந்த போது உள்ளூராட்சி ஆணையாளர் அவ்விடத்திற்கு வந்து என்னை அவதூராக பேசினார்.

இதன் போது என்னை வா என அழைத்து கேட்பேர் கூடத்திற்கு அழைத்து சென்று தகாத வார்த்தைகளால் பேசி எந்த அரசியல்வாதியை பிடித்து செய்தாய், எந்த அரசியல்வாதிக்கு படுக்கை விரித்தாய், எவனாக இருந்தாலும் பயமில்லை என மிக மிக கேவலமாக என்னை பல அதிகாரிகளுக்கு முன் என்னை வயதானவர் என்றும் பார்க்காமல் பேசினார்.

அதன் பின்னர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களிடம் சென்று என்னாலேயே இப் பிழை ஏற்பட்டது எனவும் உள்ளூராட்சி ஆணையாளருடன் கதைக்குமாறு தெரிவிக்குமாறு சொன்னார்.

அதன் பிரகாரம் நான் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களிடம் சென்று தெரிவித்திருந்தேன். 33 வருட அரச பணிக்காலத்தில் இவ்வாறான ஒரு அவமானத்தை நான் கேட்டதில்லை. நான் இறந்துவிடலாம் என்றே எண்ணுகின்றேன்.

எனினும் எனது கணவருக்காக உயிருடன் இருக்கின்றேன் என தெரிவத்தார். இவ் விடயம் தொடர்பாக நகரசபையின் செயலாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தனக்கும் உள்ளூராட்சி ஆணையாளர் பேசியதாகவும் தன்னையும் பணி நீக்கம் செய்யுமாறு தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி ஆணையாளர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட சிற்றூழியர்களையும் தாக்கியிருந்ததுடன் இது தொடர்பாக சிற்றூழியாகளால் வவுனியா பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Related Posts