நல்லூர்க் கந்தன் ஆலய திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் நலன்கருதி கடந்த 2 ஆம் திகதி தொடக்கம் வெள்ளவத்தைக்கும் யாழ்ப்பாணத்துக்குமான விசேட பஸ் சேவை இலங்கை போக்குவரத்துச் சபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் வடக்கு மாகாண சாலை முகாமையாளர் தெரிவித்தார்.
யாழ். சாலையும் காரைநகர் சாலையும் இணைந்து நடாத்தும் இச்சேவையில் தினமும் இரவு 8.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்திலிருந்து குறித்த பேருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும்.
அதேபோன்று தினமும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரவு 10 மணிக்கு கொழும்பு – வெள்ளவத்தை நோக்கி பஸ் சேவை இடம்பெறவுள்ளது.