Ad Widget

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தொடர்கிறது கையெழுத்து வேட்டை

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் எனக்கோரி சர்வதேச பொறுப்புகூறல் பொறிமுறைக்கான செயற்பாட்டு குழுவின் ஒழுங்கமைப்பில் இரண்டாவது நாளாக இன்று யாழ். மாவட்டத்தில் 5 இடங்களில் கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக யாழ்.நகர்ப்பகுதி, திருநெல்வேலி, பருத்தித்துறை நகர், பொன்னாலை மற்றும் நல்லூர் ஆகிய இடங்களில் குறித்த கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. குறித்த கையெழுத்து போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடனும் கலந்து கொண்டு தங்கள் பங்களிப்பை வழங்கினர்.

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள்  மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ். நகரில் நேற்று இந்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இரு தினங்களிலேயே சுமார் 7 ஆயிரம் கையெழுத்துக்களை எட்டியிருப்பதாக ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

வர்த்தக நிலையங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகியவற்றிலும் கையெழுத்துக்களை பெறுவதற்கான முயற்சிகளை ஒழுங்கமைப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.,நாளை (6) பாசையூர் சென் அன்ரனீஸ் தேவாலயம், யாழ் பெரிய கோவில்,, யாழ் நகர் சென் ஜேம்ஸ் தேவாலயலம் , நாவாந்துறை சென் நீக்கிலாஸ் தேவலயம், உரும்பிராய் சென் நீக்கிலாஸ் தேவாலயம், மானிப்பாய் தேவாலாயம் , சங்கானை தேவாலயம் ஆகிய இடங்களில் காலை ஞாயிறு திருப்பலியை தொடர்ந்து கையெழுத்து சேகரிப்பு இடம்பெறும். மருதனார்மடம் மற்றும் சுன்னாக சந்தைப்பகுதிகளிலும் கையெழுத்து சேகரிப்பு இடம்பெறும்.
இச்செயற்பாட்டை தொடர்ந்தும் அனைத்து கிராமங்களுக்கும் எடுத்துச்செல்ல செயற்பாட்டாளர்கள் சுய ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்நிலையில், இந்த கையெழுத்து வேட்டை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த கையெழுத்து போராட்டம் இடம்பெறவுள்ளது.

மேலும் திங்கட்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறித்த கையெழுத்து ஆர்ப்பாட்டம் இரு மாவட்டங்களினதும் நகர்ப்பகுதிகளில் நடைபெறும் எனவும் ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தகவல்களுக்கு 

Related Posts