நகர விளம்பர சேவை அனுமதியின்றி அடாத்தாக செயற்படுகின்றது

யாழ்.நகரத்தில் இருக்கும் விளம்பர சேவைப் பிரிவு மாநகர சபையில் உரிய அனுமதிகளைப் பெறாது பழைய அனுமதியுடன் அடாத்தாக நடத்தப்பட்டு வருவதாக உறுப்பினர் ஆ.பரஞ்சோதி குற்றஞ்சாட்டினார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வின் போதே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

மகேஸ்வரி நிதியத்தால் யாழ்.மாநகர சபையிலிருந்து அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்த விளம்பர சேவை, தற்போது வேறு ஒருவருக்கு சட்டவிரோதமாக கைமாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

இவ்விடயம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அரச சொத்துக்களை மீளப்பெறும் சட்டத்தின் கீழ் மாநகர ஆணையாளர் மூலம் மீளப்பெற நடவடிக்கை எடுக்க்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.

Related Posts