Ad Widget

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை அதிபர் வழக்கு முடிவுக்கு வந்தது

வடமாகாணக்கல்வி அமைச்சினால் யாழ் இந்து ஆரம்பபாடசாலை அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு அண்மையில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டிருந்தது

எனினும் தற்போது அதிபராக கடமையாற்றும் திரு.நா. மகேந்திரராஜா அண்மைய வருடங்களிலேயே அதிராக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் கல்வி அமைச்சினால் அந்நியமனம் தவறானது என கருதி மீளவும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.

இவ்விளம்பரத்தினை ஆட்சேபித்து இந்து ஆரம்பபாடசாலை அதிபரினால் யாழ் மேல் நீதிமன்றத்தில் இடைக்கால் தடை உத்தரவு கடந்த மாதம் பெறப்பட்டிருந்தது,

குறித்த ஒருமாதகாலம் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இவ்வழக்கு இன்றையதினம்(01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்போது பிரதிவாதிகள், மாகாணக்கல்வி அமைச்சினால் புதிதாக பிரசுரிக்கப்பட்ட அதிபர் பதவிக்கான விளம்பரம் இன்று வாபஸ் பெறப்பட்டதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டதை அடுதது வழக்காழிகளால் குறித்த வழக்கும் வாபஸ் பெறப்பட்டது.

இதன்காரணமாக யாழ் இந்து ஆரம்பபாடசாலையின் அதிபர் பிரச்சினை சுமூகமாக தீர்ந்தது. மேல் நீதிமன்றின் இந்நடவடிக்கையினால் யாழ் இந்து ஆரம்பபாடசாலையின் அதிபராக தொடர்ந்தும் திரு.நா.மகேந்திரராஜாவே கடமை புரியக்கூடிய சந்தரப்பம் ஏற்பட்டுள்ளது

Related Posts