Ad Widget

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபத்துகள்: இரண்டரை மாதங்களில் 48 பேர் பலி! – 4850 பேருக்கு எலும்பு முறிவு

யாழ்.மாவட்டத்தில் திடீரென அதிகரித்துள்ள விபத்துக்களால், கடந்த இரண்டரை மாதங்களில் மாத்திரம் 48 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையிலும் 700 பேர் தலை அடிபட்டுப் பாதித்த நிலையிலும் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.போதனா வைத்தியசாலைப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூன் 10 ஆம் திகதியிலிருந்து கடந்த 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்து 6 ஆயிரத்து 300 பேர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 850 பேர் எலும்புகள் முறிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அனைத்து வயதுப் பிரிவினரும் உள்ளடங்குகின்றனர்.

காயங்களைப் பொறுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் மாத்திரம் குறித்த இரண்டரை மாதங்களில் 124 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அதிதீவிர சத்திர சிகிச்சைப் பிரிவிலும் விபத்துத் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் ஏனையவர்கள் சிகிச்சை பெற்றனர்.

அவ்வாறு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் அவர்களில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் மிக மோசமாகப் படுகாயமடைந்திருந்தவர்களாவர். விபத்து இடம்பெற்றவுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் 36 பேரும், ஏனைய சிகிச்சை விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 12 பேருமாகவே 48 பேரும் உயிரிழந்துள்ளனர்.

போக்குவரத்து விதிமுறைகளை உரிய முறையில் தெரிந்திராதவர்களும், அறிந்திராதவர்களும் மட்டு மன்றிப் போக்குவரத்து விதிமுறைகளைத் தெரிந்திருந்தும் அவற்றைப் பின்பற்றாது சென்றவர்களும், வேக மாகச் சென்றவர்களுமே அதிகளவில் விவத்துக்குள்ளாகியுள்ளனர். புள்ளி விபரங்களிலும் காயப்பட்டவர்களின் தகவல்களின் அடிப்படையிலும் இருந்தும் இவை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக வைத்தியசாலைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

Related Posts