Ad Widget

முதலமைச்சரின் தற்துணிவு நடவடிக்கைகளை உறுப்பினர்கள் கேள்விக்குட்படுத்துவது குறித்து அதிருப்தி!

வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் தற்துணிவு நடவடிக்கைகளினை கேள்விக்குட்படுத்துவது குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மேலும் வடக்கு மாகாண சபை, மாகாண சபை போல் இயங்க வேண்டுமெனவும் மாநகரசபை போல் இயங்கக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இறுதியாக நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் உறுப்பினர் பரஞ்சோதி 40 இற்கும் மேற்பட்ட கேள்விகளினை முன்வைத்திருந்தார்.

இக் கேள்விகள் குறித்து வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் ஆயூப் அஸ்மின் சபையில் ஒழுங்குப்பிரச்சினை குறித்தும் கேள்விக்குட்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை அமர்வின் போது முதலமைச்சரிடம் சில உறுப்பினர்களினால் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இதன்போது முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் குறித்தும் கேள்விக்குட்படுத்தலாம் என கூறப்படுகின்றது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் இவரது தற்துணிவு நடவடிக்கைகளினை கேள்விக் குட்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும் என உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வடக்கு மாகாண சபையின் அருங்காட்சி உறுப்பினர் சிவாஜிலிங்கத்திடம் கேட் கப்பட்ட போது,
முதலமைச்சர் மீது தொடர்ந்து கேள்விகளை முன்வைப்பது பொருத்தமற்ற செயற்பாடாகும். இது துர்நோக்கம் கொண்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.முதலமைச்சர் தனது உதவியாளராக அல்லது செயலாளராக யாரை வேண்டுமானாலும் வைத்திருக்க முடியும். இதனை யாராலும் கேள்விக் குட்படுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts