- Monday
- September 22nd, 2025

பயணப் பையில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு - புறக்கோட்டை - பெஸ்டியன் மாவத்தை பகுதியில் அநுராதபுரம் பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கிடந்த பயணப் பையினுள் இருந்து அண்மையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் யாழ் - வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதான யுவதி...

சம்பந்தனிடம் எப்போதும் ஒரே கொள்கையும் வெளிப்படையான செயற்பாடுமே உள்ளது. ஆகவே சம்பந்தனை சந்தேகப்படாது நம்ப முடியும். ஆனால் ரணில் மிகப்பெரிய சூழ்ச்சிக்காரர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரணிலை நம்பமுடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். வடக்கில் இருப்பவை நாய்க்குட்டிகள் அல்ல புலிக்குட்டிகள் என்பதை மீண்டும் ஒருமுறை கூட்டமைப்பினர் நிரூபித்து விட்டனர்...

ஆவரங்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை(04) இரவு இடம்பெற்ற கத்திக் குத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தைச் சேர்ந்த மாதவன் கோவிலன் (வயது 22) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகி கையில் படுகாயமடைந்தார். சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவரை, இடையில் மறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார். கத்தியால் குத்தியவர்...

ஆட்சி மாற்றத்துடனான புதிய அரசை கொண்டு வருவதற்கு தாமே காரணமென கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது புதிய அரசு ஏமாற்றி விட்டதாக கூறிவருகின்றமை மக்களை ஏமாற்றும் அவர்களின் மற்றுமொரு தந்திரோபாயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அளவெட்டி கிழக்கு கும்பலை கிராம...

யாழ்ப்பாணம் – பூநகரிக்கு இடைப்பட்ட கடல் நீரேரிப் பகுதியில் அமைந்துள்ள பூவரசம்தீவில் சட்டவிரோதமான முறையில் ஆட்டிலறி, மோட்டார் குண்டுகளை கொண்டு வந்து களஞ்சியப்படுத்தி, அதிலிருந்து வெடி மருந்துகளை வேறாக்கி விற்பனை செய்து வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பூவரசம் தீவில் கடந்த சில காலமாக இந்த சட்டவிரோத நடவடிக்கை இடம்பெற்று...

நாடு பிளவுபடாத சுயாட்சி ஒன்றையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாகவும் தமிழர்களின் அபிலாஷைகளை சிலர் பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவது கவலைக்குள்ளாக்குவதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இரா. சம்பந்தன் தொடர்ந்தும் பேசுகையில்- அபிவிருத்தி அடைந்து வருவதில் எனக்கு ஒரு வீதமும் திருப்தியில்லை. அபிவிருத்தியை விடவும்...

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் நேற்று அதிகாலையில் வீடுகளுக்குள் புகுந்த முகமூடிக் கொள்ளையர்களால் சுமார் ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் இரண்டரை லட்சம் ரூபா பணம் என்பனவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். கந்தரோடை சுப்பிரமணியம் வீதியில் உள்ள வீடு ஒன்றினுள் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கட்டிய நால்வர் கூரை வழியாக உள் நுழைந்து அங்கிருந்த சுமார்...

ஆவணி மாதத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய தேசிய அளவிலான பல நிகழ்வுகள் இடம்பெறுவதால் யாழ். மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்டவேண்டிய தேவையுள்ளது. இதனால் இந்த மாதத்தில் பிணை வழங்க முடியாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தவர்...

எமது கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கா.வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கேஜெகன்) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் எமது கட்சியில் இருந்து கட்சியின் கட்டுப்பாட்டு...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் பிரதான அலுவலகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை (02) சென்றுள்ள சாவகச்சேரி பொலிஸார், திங்கட்கிழமையன்று (03) தன்னை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வருமாறு கூறிவிட்டுச் சென்றதாக அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். திங்கட்கிழமை வேறு நிகழ்வுகள் இருந்தமையால் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லவில்லையெனவும், அது தொடர்பில் உதவியாளர் ஊடாக கடிதம் மூலம் சாவகச்சேரி...

வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் யாழ்ப்பாண இளைஞர், யுவதிகள் பணியாற்றி வருகின்றனர். யாழ். மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளும் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளும் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். இவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது கட்சி அலுவலகங்களை நோக்கிச் செல்கின்றனர். வேலைவாய்ப்பு தேவையை நாடி வரும் இவர்களை அந்தக்...

கடவுச்சீட்டு வழங்கும்போது உயிரளவியல் தவல்களை பெற்றுக்கொள்வதற்காக கைவிரல் அடையாளத்தை பதிவு செய்யும் நடைமுறை, இம்மாதம் 10ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டின் தகைமை மற்றும் நம்பகத்தன்மை என்பவற்றை கருத்திற்கொண்டும் நாட்டின் நம்பிக்கைத் தன்மையை சர்வதேச ரீதியில் அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சி.ஐ.டி. என்ற இலங்கையின் குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்கு ஆள்கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உதவிகளை ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரே வழங்கியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. போர் காரணமாக இலங்கையிலிருந்து அரசியல் தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழர்களைத் தடுத்துநிறுத்தும் ஆஸ்திரேலிய அரசின் தந்திரோபயமாகவே இந்தக் கொடூரமான செயலில் ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ளது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட முதன்மை வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ள குற்றச்சாட்டை அடியோடு மறுக்கின்றோம். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்....

யாழ். மருத்துவ சங்கத்தின் உதவியுடன் மேற்க்கொள்ளப்பட்டு வந்த மருத்துவ முகாம்கள் நிர்வாக குளறுபடிகள் காரணமாக இடைநிறுத்தம் செய்யப்படகின்றன என யாழ்ப்பாணம் மருத்துவ சங்கத் தலைவரும் சமுதாய மருத்துவ நிபுணருமான முரளி வல்லிபுரநாதன் அறிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு: யாழ். மருத்துவ சங்கம் வடக்கு...

நாம் ஒருபோதும் ஐக்கியத்தைக் கைவிடவில்லை. ஐக்கிய இலங்கை என்பது ஒரே இலங்கையைத்தான் (ஒற்றை ஆட்சி). ஐக்கியத்திற்கும், ஒரே இலங்கைக்கும் (ஒற்றை ஆட்சி) இடையில் வித்தியாசமில்லை. ஐக்கியப்படுத்துதல் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கும் அரசியல், கலாசார வேலைத்திட்டமாகும். ஒற்றையாட்சி என்பது நீதிமன்ற நடவடிக்கையாகும். - இவ்வாறு பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய...

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் போது தெரிவு செய்த கட்சியின் பெயர் மற்றும் இலக்கத்துக்கு முன்பாக அல்லது சுயேற்சை குழுவின் இலக்கத்தின் முன்பாக ("X") அடையாளமிட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். அதற்கு பிறகு ஏற்றுக்கொண்ட கட்சியின் அல்லது சுயாதீன குழுவின் வேட்பாளர்கள் மூன்று பேரின் இலக்கங்களுடைய சதுரத்தில் ("X")...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி ஆட்சிமுறை கோரிக்கையை நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் திட்டவட்டமாக நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கோரிக்கை ஏற்கப்படின் நாட்டிற்குள் பிரிவினை ஏற்படலாம் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள பிரதான கட்சியான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்...

இலங்கையில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே கூடுதல் ஆதரவு இருப்பதாக சென்டர் ஃபார் பாலிசி ஆல்டர்நேட்டிவ்ஸ் மேற்கொண்ட ஒரு கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எந்த விஷயங்களில் கூடுதலாக கவனம் செலுத்துகிறார்கள், யாரை பிரதமர் பதவிக்கு கூடுதலாக ஆதரிக்கிறார்கள், எந்த ஊடகம் பிரச்சாரங்களில்...

All posts loaded
No more posts