- Saturday
- September 26th, 2026
வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதார பரிசோதகர்களுடன் இரா ணுவத்தினர் செல்வது தொடர்பில் பொது மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். எனினும் சுகாதார பரிசோ தகர்களுடன் இராணுவத்தினர் செல்வதற்கு தாம் அனுமதிய ளிக்கவில்லை என யாழ். மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார். அண்மைய நாட்களாக யாழ். மாநகர சபைக்குட்பட்ட...
யாழ். பஸ் நிலைய பகுதியில் மது போதையில் நின்ற ரவுடிகளின் தாக்குதலுக்குள்ளாகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தம்பதியரில் கணவன் நேற்று முன்தினம் 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை இரவு10.30 மணியளவில் யாழ். பஸ் நிலையத்துக்குப் பின்பாக உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் அருந்தியுள்ளனர்....
ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று சனிக்கிழமை மாலை யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய மாணவர்கள் சிலர் அங்கு பிரத்தியேகமான இடம் ஒன்றில் திலீபனின் உருவப்படத்துக்கு மலர் தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்...
யாழில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ் மாவட்டத்திலே கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு...
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாட்டில் கல்லுாரியின் 125 வது ஆண்டு நிறைவை முனை்னிட்டு இன்று(26) இரத்ததானம் இடம்பெற்றது இதில் பெருமளவில் பழையமாணவர் பங்கேற்றனர். நிகழ்வு ஆறு திருமுருன் , சின்மய மிசன் சுவாமிகள் ஆகியோரின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகியது . இன்றைய நாளில் விழாக்கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் இந்த இரத்ததானம் மட்டும் நிகழ்ந்தது....
யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருப்பதாக, யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும், மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜராகி தெரிவித்திருக்கின்றனர். சுன்னாகத்தில் கடையொன்றுக்குள் புகுந்த...
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்துவதற்காக விசேட செயற்றிட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். சிறுவர், பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், போதைவஸ்து பாவனை ஆகியவற்றுக்கு எதிராக முன்னரும் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம். இது தொடர்பான அதிகாரிகளுடன் அண்மையில் கலந்துரையாடலை மேற்கொண்டோம்....
வடக்கு மாகாண சபையின் சில அமைச்சுக்களின் கீழ் சுமார் ஒன்பது கோடி ரூபா பெறுமதியான பாதுகாப்பு மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவதில் ஒழுங்கீனம் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்து தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனம் ஒன்று நீதிமன்றுக்குச் சென்றிருக்கின்றது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் சுமார் 3 கோடி 35 லட்சம் ரூபா பெறுமதியான ஒப்பந்தமும் -...
வடக்கு - கிழக்கு இணைந்த தமிழீழ விடுதலைக்காக யாழ். நல்லூரில் உண்ணாநோன்பிருந்து அஹிம்சை வழியில் போராடி தனது உயிரை ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் 28ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. தமிழீழத் தாயக மண்ணிலிருந்து இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட 5 அம்சக்...
இந்தியா உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் 40 ஆயிரம் பொது மக்களின் உயிரிழப்பைத் தவிர்த்திருக்க முடியும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இந்தியாவின் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் சர்வதேச நீதிப் பொறிமுறைகைளைத் தொடர்ச்சியாக...
அக்கினி இசைக் குழுவின் இசைச் சமருடன் கூடிய மாபெரும் இறுதிப் போட்டி.“வடமாகாண வல்லவன்”; யார்? யாழ் மாவட்டமா? மன்னார் மாவட்டமா? எதிர்பார்ப்பிற்கு பஞ்சமில்லாத சுவாரஷ்யமான போட்டி. “தினச்செய்தி”யின் அனுசரணையில் மாபெரும் பரிசு மழை பொழியும் உதைபந்தாட்டத் தொடராக கருதப்படும் வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் வி.க நடாத்தும் “வடமாகாண வல்லவன்” உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி( 26.09.2015) இன்று...
சரித்திரப் பிரசித்தி பெற்ற வடமராட்சி ஶ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று காலை 08.30 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை ஆரம்பமாகி நடைபெற்று அதன் பின்னர் சுவாமி காலை 10 மணியளவில் தேருக்கு எழுந்தருளவுள்ளார். இதனைத் தொடர்ந்து சுவாமியின் தேர் ஆரோகணம் காலை 10. 30 மணிக்கு...
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் 2015 ஆம் ஆண்டுக்குரிய பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியில் இருந்து ரூபா 3 மில்லியன் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி விவசாய அமைச்சின் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (23.09.2015) நடைபெற்றபோது அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உரிய பயனாளிகளுக்குப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். பிரமாண...
பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அந்த அதிகார சபையில் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியுமெனவும், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் – “போக்குவரத்து நியதிச்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவரை விசாரணைக்கு உட்படுத்தி வாக்குமூலம் பெற்றுக்கொண்ட முதலாவது தருணத்துக்கு மஹிந்த ராஜபக்ஷ முகங்கொடுத்தததாக பாரிய ஊழல் மற்றும் மோசடி தொடர்பான விசாரணை குழுவின் செயலாளர் செயலாளர் லெசில் த சில்வா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கு ஆணைக்குழுவின் அதிகாரிகளை அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்தமையானது, பாரிய இலஞ்ச ஊழல் மோசடிகளை விசாரணை...
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளி நாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி, அமெரிக்கா சமர்ப்பித்துள்ள திருத்தப்பட்ட புதிய பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித அலுவலகம் வௌியிட்ட அறிக்கையின்...
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை கோரும் அமெரிக்காவின் தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தொடர்பான தீர்மானத்திற்குப் பிரதான அனுசரணையாளரான அமெரிக்காவுடன் பிரிட்டன், மஸிடோனியா, மொன்டிநிக்ரோ மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் இணை அனுசரணை வழங்கியுள்ளன. விரைவாக...
வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்தப் பெண் அவர்களது காலில் விழுந்து கதறியதோடு புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டதால் உயிர்தப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலணையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு இரண்டு சந்தேக நபர்களும் சென்றுள்ளனர். அவர் திருமணமாகி 7...
தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் உறவுப்பாலத்தை வளர்ப்பதற்காக எனது தந்தை பணியாற்றியதை போல, தமிழ் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை பேணும் வகையில் செயற்படுவேன் என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா, வியாழக்கிழமை (24) நடைபெற்ற போது, அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர்...
'பஞ்சவர்ண நரியார்' சிறுவர் நாடகம், எதிர்வரும் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூரில் அமைந்துள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் மேடையேறவுள்ளது. குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்கள் எழுதிய இந்த நாடகத்தை செயல்திறன் அரங்க இயக்கம் தயாரித்துள்ளது. நல்லூர் நாடகத் திருவிழா 2015இல் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்...
Loading posts...
All posts loaded
No more posts
