Ad Widget

கோப்பாயில் இராணுவம் மீண்டும் காணி அபகரிப்பு முயற்சி! – மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தம்

கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் இரா­ணுவத் தேவைக்­காக சுவீகரிப்பதற்கு, ஒன்­றரை ஏக்கர் காணியை அள­விடும் பணி மக்கள் எதிர்ப்புத் தெரி­வித்­த­மையால் கைவி­டப்­பட்­டுள்­ளது.

கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கோப்பாய் மத்தி கிராம அலு­வலர் பிரிவின் கீழ் கோப்­பாயில் இருந்து கைதடி செல்லும் வீதியில் சுமார் ஒரு ஏக்கர் காணியில் இரா­ணுவ முகாம் அமைந்­துள்­ளது. இது 28 பேருக்குச் சொந்­த­மான காணி­யாக உள்­ளது.

இக்­கா­ணியில் ஒன்­றரை ஏக்கர் பகு­தியை அள­வீடு செய்­வ­தற்­காக நில அளவை திணைக்­க­ளத்­தினர் வருகை தந்­த­போது காணி உரி­மை­யா­ளர்கள் மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சுகிர்தன், கஜ­தீபன், பரம்­சோதி ஆகியோர் ஒன்­றி­ணைந்­த­மையால் நில அள­விடும் பணி கைவி­டப்­பட்­டுள்­ளது. எனினும் காணி அளப்­ப­தற்கு 2 வாரத்தின் பின்னர் தாம் வரவுள்ளதாகவும் அவர்களி னால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts