மீனவர்கள் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் உடன்பாடு

இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளது. இந்த பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை, எதிர்வரும் 24, 25ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

அரச மருத்துவர்கள் நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 25ஆம் திகதி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அரச வைத்தியகள் சங்கம் அறிவித்துள்ளது. புதிய அரசிடம் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபடப் போகின்றனர் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய அரசிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து 8 வாரங்கள்...
Ad Widget

மருதடியான் ஆலயத்தில் மீண்டும் சிக்கல்!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகிறது. இந்நிலையில் கொடியேற்றத்தின் போது பின்பற்றப்படும் மரபை ஆலய நிர்வாகத்தினர் சிலர் பின்பற்றாது தவிர்க்க முயல்கின்றனர். இதனால் சிக்கல் நிலை எழுந்துள்ளது. அத்துடன் இது தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் புறந்தள்ளி வருகின்றனர் எனத் தெரியவருகின்றது. இந்த ஆலய...

வடமாகாண சாலைகளின் ஆளணிப் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் – விஜயகலா

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண சாலைகளில் நிலவிவந்த ஆளணிப் பற்றாக்குறை எதிர்வரும் ஏப்ரல் மாத முற்பகுதியில் நிவர்த்தி செய்யப்படும் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்திய போக்குவரத்து அமைச்சால் வடமாகாண சாலைகளுக்கு 35 பேருந்துகள் அண்மையில் வழங்கப்பட்டன. சாலைகளில் சாரதி,...

பாலியல் நோய்ப் பிரிவுக்கு புதிய தொலைபேசி இலக்கம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவின் புதிய தொலைபேசி இலக்கம் 0212217756 என மாற்றப்பட்டுள்ளதாக பாலியல் தொற்று நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்திய அதிகாரி தாரணி குருபரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் பாலியல் தொற்று நோய் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்.போதனா...

நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்த நபர்களை கைது செய்யயுமாறு கோரி பேரணி

ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தின் குடிநீர் தாங்கியில் நஞ்சு கலந்த, 26 மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கண்டனப்பேரணி ஒன்று வெள்ளிக்கிழமை (20) சுன்னாகத்தில் நடைபெற்றது. தூய நீருக்கான செயலணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கண்டனப் பேரணியானது, ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ முருகன் சனசமூக நிலைய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, புன்னாலைக்கட்டுவன்...

25 வருடங்களின் பின்னர் பருத்தித்துறை – மூளாய் பேருந்து சேவை

கடந்த 25 வருடங்களாக இடம்பெறாமல் இருந்த பருத்தித்துறையிலிருந்து சுன்னாகம், தெல்லிப்பழை, அளவெட்டி ஊடாக மூளாய் வரையிலான பேருந்து சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளர் க.கந்தசாமி, வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்திய அரசாங்கத்தால் எமது சாலைக்கு 6 பேருந்துகள் அண்மையில் வழங்கப்பட்டன. பருத்தித்துறை –...

பொன்சேகாவுக்கு உயரிய விருதினை வழங்கியது இந்தியா

பயங்கரவாதத்தினை ஒழித்தமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்கு உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் 2015 பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கை சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி சேனக ஹரிபிரிய டி சில்வா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் முன்னாள் இராணுவத்...

விபூசிகாவை தாயுடன் இணைக்க நீதிமன்று மறுப்பு

மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் இருக்கும் பாலேந்திரன் விபூசிகாவை அங்கிருந்து விடுவித்து அவரது தாயார் ஜெயக்குமாரியுடன் இணைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், அனுமதி மறுத்துள்ளார். தனது மகளை சிறுவர் இல்லத்திலிருந்து விடுவித்து தன்னுடன் இணைக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் ஜெயக்குமாரி மனுக்கொடுத்திருந்தார். நேற்று காலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மனு, பிற்போடப்பட்டு பிற்பகலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஜெயக்குமாரி சார்பாக...

சொந்த நிலத்தைப் பார்வையிடச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய மக்கள்

உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த தமது நிலத்தினை பார்வையிடச் சென்ற வசாவிளான் கிழக்கு மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். கடந்த 25 வருடகாலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பிரதேசத்தில் உள்ள 197 ஏக்கர் காணி இன்றைய தினம் மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என கூறி 411 குடும்பத்தை அழைத்து...

ராஜித்த, அவரது மகன் உட்பட 14 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அவரது மகன் எக்சத் சேனாரத்ன ஆகியோரை ஏப்ரல் 2ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராஜித்தவின் இளைய மகன் இளம் பெண் ஒருவரைக் கடத்தி தன்னுடன் வைத்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் ராஜித்த சேனாரத்னவின் இளைய மகனால், தனது மகள் கடத்திச்...

சுன்னாகம் பிரதேச நிலத்தடி நீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை நிபுணர்குழு தெரிவிப்பு

சுன்னாகம் பிரதேச நிலத்தடிநீரில் ஆபத்தான நஞ்சு மாசுகள் இல்லை என்று தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக நிலத்தடிநீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய்வதற்காக வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிவித்துள்ளது. தூயகுடிநீருக்கான செயலணியின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை (20.03.2015) சுகாதார அமைச்சின் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச்செயலணியில் கலந்துகொண்டு தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் தொடர்பாக விளக்கமளித்த...

சேவைசெய்ய கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவேண்டும் – முதலமைச்சர் சி.வி

மக்களுக்கான உன்னதமான சேவையை செய்யும் அரிய வாய்ப்பை இறைவன் தந்திருக்கின்றான். அதைக்கொண்டு உயிர் காக்கும் உன்னத பணியை செய்ய வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுகாதாரத் தொண்டர்களாக நீண்டகாலமாக கடமையாற்றிய தொண்டர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (19) கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக கலந்து...

வீடுகளை புனரமைக்க அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 13பேருக்கு அனர்த்த நிவாரணக் கொடுப்பனவாக வீடுகள் புனரமைக்க தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார். சமூக சேவைகள் உத்தியோகத்தர், வெளிக்கள மேற்பார்வை செய்து தகுதியான பயனாளிகளை தெரிவு செய்தனர். உரிய பிரிவின் கிராம...

 ரயிலிலிருந்து வீழுந்த மூதாட்டி காயம்

யாழ். புகையிரத நிலையத்தில் தரித்து நின்ற ரயிலில் ஏறமுற்பட்டு தவறி விழுந்ததில் படுகாயமடைந்த மூதாட்டியொருவர் வியாழக்கிழமை (19), யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியைச் சேர்ந்த கோ.சரோஜாதேவி (வயது 66) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். கொழும்புக்குச் செல்வதற்காக புகையிரத நிலையத்துக்கு சென்ற இவர், ரயிலில் ஏறுவதற்கு முற்பட்டபோது...

ரூ. 5,000 போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் பாவனையின் போது விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த போலி நாணயத்தாள்களின் புழக்கம் தற்போது நாடு முழுவதிலும் பரவலாக இருந்து வருவதால்,...

மயக்க மருந்து கொடுத்து வர்த்தகரிடம் கொள்ளை நெல்லியடியில் சம்பவம்

தேநீரில் மயக்க மருந்து கொடுத்து வர்த்தகர் ஒருவர் அணிந்திருந்த பெறுமதியான ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று மாலை நெல்லியடிப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்துக்கு வந்த இருவர் வர்த்தகருடன் சிநேகமாக உரையாடியுள்ளனர். அவர்களில் ஒருவரிடம் தேநீர் வாங்கிவரு மாறு மற்றவர் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார் அவரும் அருகில் உள்ள...

வலி.வடக்கில் அடுத்த மாதத்திற்குள் 1,100 ஏக்கர் நிலப்பரப்பு முழுமையாக விடுவிக்கப்படும் – சுவாமிநாதன்

வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பொதுமக்களின் காணிகளில் 1,100 நிலப்பரப்பு அடுத்த ஒரு மாத காலத்திற்குள் முழுமையாக விடுவிக்கப்படும்.என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணிகளை விடுவிப்பது தொடர்பில் மூவர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. சம்பூர்...

25 ஆண்டுகளின் பின்னர் வசாவிளானை மக்கள் பார்வையிட அனுமதி

வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்த வசாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவு மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்படவுள்ளது. மீள் குடியமரவுள்ள மக்களை, குட்டியப்புலம் பிரதேசத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வருகை தருமாறு மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்துள்ளார். வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச செயலா ளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில்...

தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது என அரசியலமைப்பில் இல்லை!

தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது என அரசியலமைப்பில் சொல்லப்படவில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts