Ad Widget

சர்வதேச விசாரணைக்கு புதிய ஜனாதிபதி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – டேவிட் கமரூன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐ.நாவின் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவை நான் வாழ்த்துகிறேன். நான் அந்த நாட்டிற்கு விஜயம் செய்த வேளை அந்த நாட்டில் பெரும் சக்தி...

மைத்திரிபாலவுக்கு ஒபாமா வாழ்த்து

இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முக்கியத்துவத்துக்கு அப்பால் உலகம் முழுவதும் ஜனநாயகத்திற்கான ஆதரவு - நம்பிக்கையாகவும் உள்ளது.
Ad Widget

யாழ் பல்கலைக்கழகப் பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் பதவி விலகக் கோரிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களை பதவி விலகுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. இது தொடர்பில் சங்கத்தின்  தலைவர் மற்றும் இணைச்செயலாளர் ஆகியோரால் ஒப்பமிடப்பட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவையின் வெளிவாரி உறுப்பினர்கள் யாவரும் எதிர்காலத்தில் தூய்மையான, அரசியல் கலப்பற்ற, வினைத்திறன் மிக்க பல்கலைக்கழக நிர்வாகம் அமைவதற்கு உடனடியாக...

தமிழ் மக்கள் நாட்டின் முக்கிய அம்சம் என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது

தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் ஒரு முக்கிய அங்கம் என்பதை இந்த தேர்தல் முடிவு எடுத்துக்காட்டியுள்ளதாக வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தலில் தேசிய ரீதியில் நாங்கள் எமது...

பொறுத்திருந்து பார்ப்போம் – டக்ளஸ்

தேசிய அரசை அமைக்கப்போவதாக மைத்திரி கூறியுள்ளார். அதன் சாதக பாதகங்களை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெள்ளிக்கிழமை (09) தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் தொடர்பாக கருத்து கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை...

மைத்திரிபால சிறிசேன வெற்றி – தேர்தல்கள் ஆணையாளர் அறிவிப்பு

நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். 62 இலட்சத்து 17,162 (51.28%) வாக்குகளை மைத்திரிபால சிறிசேன பெற்றுக் கொண்டுள்ளதாக தேர்தல்கள்...

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் அமெரிக்கா

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கப் போகும் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்ற தயாராகவிருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். மேலும் முடிவுகளை ஏற்று வௌியேறிய மஹிந்த ராஜபக்ஷ குறித்தும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இலங்கையில் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களித்துள்ளதாகவும், ஒவ்வொரு வாக்கும் வெற்றியை பதிவு செய்துள்ளதாகவும் அவர்...

யாரும் சட்டத்தை கையில் எடுக்காதீர்கள்!

எவரும் சட்டத்தைக் கையில் எடுக்க வேண்டாம் எனவும், எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அனைவரும் சட்டத்தை மதித்து செயற்படுமாறும் ரணில் விக்ரமசிங்க இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இன்று மாலை இலங்கையின் புதிய...

நாட்டைவிட்டுச் செல்ல மாட்டோம் – பசில், நாமல்

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு தலைவணங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நாட்டை விட்டுச் செல்லமாட்டோம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பசில்...

449072 வாக்குகளால் மைத்திரி வெற்றி!

2015 சனாதிபதி தேர்தலில் 4 லட்சத்து 49072 வாக்குகளால் மைத்திரி வெற்றி பெற்றுள்ளார்.அவ்வெற்றிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகளே காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இலங்கை மக்களுக்கு மைத்திரி நன்றி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ததற்காக இலங்கை மக்களுக்கு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்திருக்கிறார். தனது அதிகாரபூர்வ இணைய தளத்தில் தேர்தல் முடிவு குறித்து கருத்தை வெளியிட்டிருக்கும் மைத்திரிபால சிறிசேன, " என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாக்களித்த அனைத்து இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத்...

வரலாற்றிலேயே அமைதியாக நடைபெற்ற தேர்தல் இது!

நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை நோக்குமிடத்து ஜனாதிபதி தேர்தல் வரலாற்றிலேயே வன்முறைகள் குறைந்த, அமைதியான தேர்தலாக இத்தேர்தலை குறிப்பிட முடியுமென தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலையம் குழு தெரிவிக்கின்றது. இந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த தேசிய தேர்தல் கண்காணிக்காளர் மத்திய நிலைய தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்தார். 1982ஆம் ஆண்டுக்குப்பிறகு...

மைத்திரி, ரணில் இன்று சத்தியப்பிரமாணம்

எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். புதிய பிரதமராக ரணி;ல் விக்கிரமசிங்க பதிவுயேற்றவுடன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பிரதமர் தி.மு.ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சரவை செயலிழந்துவிடும். இந்நிலையில், மைத்திரிபால சிறிசேன, தனது தலைமையிலான அமைச்சரவையொன்றை இன்று அமைப்பார் என...

த.தே.கூ தலைவர் வாக்களிக்கவில்லை

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்களிக்கவில்லை. ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர். வாக்களிக்கும் உரிமையும் திருகோணமலை மாவட்டத்திலேயே உள்ளது. எனினும் அவர் தனது வாக்குரிமையினை செலுத்தச் செல்லாது கொழும்பிலேயே இருந்துள்ளார். அவர் வாக்களிக்கச் செல்லாதமைக்கு சுகவீனம் காரணம்...

வடக்கு கிழக்கு மகிந்தவை முற்றாக நிராகரித்தது

இம்முறை சனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வடக்குகிழக்கு மாகாணம் முற்றாக நிராகரித்து மைத்திரியை தெரிவுசெய்துள்ளது நாடுமுழுவதும் அறவிக்கப்பட்டுள்ள முடிவுகளின்படி மைத்திரி அவர்களே முன்னணியில் இருக்கின்றார்!      

மைத்திரிக்கு மோடி வாழ்த்து

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமைதியான மற்றும் ஜனநாயகமான தேர்தலை முன்னெடுப்பதற்காக ஒத்துழைத்த இலங்கை மக்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தோல்வியை ஏற்று அலரி மாளிகையை விட்டுச் சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுநேரத்திற்கு முன்னர் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார். இன்று (09) அதிகாலை எதிர்கட்சித் தலைவருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தமது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் அலரி...

அமைச்சரவை அவசரமாகக் கூடுகிறது! நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்?

தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில் - விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் - அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது. நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்படுகின்றது

யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள் சில

யாழ். மாவட்டம் தேர்தல் தொகுதிகளுக்கான சில முடிவுகள் பருத்தித்துறை மைத்திரி 17388 மகிந்த 4262 சாவகச்சேரி மைத்திரி 23514 மகிந்த 5647 மானிப்பாய் மைத்திரி 26958 மகிந்த 7225 உடுப்பிட்டி மைத்திரி 18119 மகிந்த 3837 இதுவரையில் வெளியான தேர்தல் முடிவுகளின் படி மைத்திரிக்கு 311,117 (56.16%) மகிந்த விற்கு 236,386 (42.67%) கிடைக்கபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடக்கில் 60 வீத வாக்குப்பதிவு!

இன்று காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் 60 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆகக் கூடுதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 73 வீத வாக்கு பதிவாகியுள்ளது. இதன்படி- யாழ்ப்பாணம் - 61% கிளிநொச்சி - 64% முல்லைத்தீவு - 73% வவுனியா -...
Loading posts...

All posts loaded

No more posts