Ad Widget

தூய நீருக்காக உண்ணாவிரதம் இருந்த இருவர் மயங்கி விழுந்தனர்

வலிகாமம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு தொடர்பில் வடமாகாணசபையின் நிபுணர் குழு அறிக்கையின் விளக்கத்தை எழுத்து மூலம் தருமாறு கோரி, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் உண்ணாவிரதம் இருந்த 8 பேரில் இருவர் நேற்று இரவு மயங்கி விழுந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம் கிணற்றில் எண்ணெய்க் கசிவு இல்லையென்றால், அந்நீரை பொதுமக்கள் பருக முடியுமா என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என்பது உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்றையதினத்திலிருந்து இவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து கலந்துரையாடியபோதிலும், உண்ணாவிரதப் போராட்டத்தை தாங்கள் கைவிடமாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர்.

Related Posts