Ad Widget

3 மாதங்களாக வழங்கப்படாத கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன

கடந்த 3 மாதங்களாக வழங்கப்படாதிருந்த சமூர்த்திக் கொடுப்பனவுகள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் அந்தந்த சமூர்த்தி வங்கிகள் ஊடாக வழங்கப்படும் என வாழ்வின் எழுச்சித்திட்ட யாழ்.மாவட்ட பணிப்பாளர் கா.மகேஸ்வரம் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திலுள்ள சமூர்த்திப் பயனாளிகளுக்கு கடந்த 3 மாதங்களாக சமூர்த்திக் கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை. அவர்களுடைய சமூர்த்திக் கொடுப்பனவுகள் எதிர்வரும் 9, 10 மற்றும் 11ஆம் திகதிகளில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

Related Posts