யாழ்ப்பாணத்தில் 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு புதிய நியமனம்!

யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் 9 நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு புதிய சேவை நிலையங்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு தரமுயர்த்துவதற்காக 2025ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட திறமை அடிப்படையிலான மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, குறித்த உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் (17.11.2026) வழங்கி வைத்தார்.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் 11.11.2026 அன்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்நியமன நடவடிக்கை வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இதில் திறமை அடிப்படையில்

மரியான் அன்ரன் ஜேசுதாஸ் – காரைநகர் பிரதேச செயலகம்,
தர்ஷினி கிருஷ்ணகுமார் – கரவெட்டி பிரதேச செயலகம்,
நேசபவாணி தியாகச்சந்திரன் – தெல்லிப்பழை பிரதேச செயலகம்,
திருநாவுக்கரசு கலைச்செல்வன் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்,
சிவகெளரி இந்திரஜித் – யாழ்ப்பாணம் பிரதேச செயலகம்,
இராஜசேகரம் அசோகன் – வேலணை பிரதேச செயலகம்,
அம்பலம் பாலஸ்கரன் – நெடுந்தீவு பிரதேச செயலகம் ஆகிய 7 உத்தியோகத்தர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை அடிப்படையில் கிருஷ்ணராசா உதயராஜ் –ஊர்காவற்றுறை பிரதேச செயலகம்,
பாலசிங்கம் ஜனனி – நல்லூர் பிரதேச செயலகம் தெரிவு ஆகிய 2 உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நியமனங்கள் ஊடாக யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts