திடீரென பூட்டப்பட்ட மாவட்டச் செயலகம்

தூய நீருக்கான ஆர்ப்பாட்ட பேரணி, மாவட்டச் செயலகத்தை அண்மித்தபோது மாவட்டச் செயலகத்தின் நுழைவாயிலின் கதவுகள் பூட்டு இடப்பட்டு பூட்டப்பட்டிருந்தன.

தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், விதை குழுமம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் யாழ்.மாவட்டச் செயலாளருக்கு மகஜர் வழங்குவதற்காக பேரணியில் கலந்து கொண்டவர்கள் மாவட்டச் செயலகத்துக்குள் நுழைய முடியாமல் நுழைவாயில் கதவு பூட்டு போடப்பட்டிருந்தது.

எனினும் சிறிது நேரத்தில் அங்கு வந்த மாவட்டச் செயலக அதிகாரியொருவர் கதவை திறக்குமாறு காவலாளிகளுக்கு பணித்தார். இதனையடுத்து பேரணியில் கலந்துகொண்டவர்கள் உள்ளே சென்றபோது, மாவட்டச் செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் வெளியில் வந்து வாசலில் வைத்து மகஜரைப் பெற்றுக்கொண்டார்.

அண்மையில் நடைபெற்ற காணாமற்போன உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தின் போதும் மாவட்டச் செயலகத்தின் நுழைவாயில் கதவுகள் பூட்டப்பட்டது. எனினும் அதனை தள்ளிக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts