Ad Widget

வடக்கு முதல்வரிடம் வாக்குவாதப்பட்ட போராட்டக்காரர்கள்

யாழ்.தூயநீருக்காக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வடக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் நேரில் கலந்துரையாடச் சென்றிருந்த நிலையில், முதலமைச்சர் விடுத்த கோரிக்கைகளை ஏற்கமறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.

நேற்றய தினம் யாழ்.மாவட்டத்தில் தூய குடிநீருக்கான கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த போராட்டத்தில் அரசியல்வாதிகள் எவரும் கலந்துகொள்ள கூடாது என முதலிலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

நேற்றய தினம் மாலை குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நல்லூர் சுற்றாடலில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் உண்ணாவிரதிகளுடன் நேரில் பேசுவதற்குச் சென்றிருந்தனர்.

இதன்போது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பேசிய சம்பவம் நேற்று இரவு 8.30மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உண்ணாவிரதிகளிடம் 12ம் திகதிவரையில் கால அவகாசம் கொடுத்து உண்ணாவிரதத்தை கைவிடுங்கள் என முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கேட்டனர்.

ஆனால் அவ்வாறில்லை நாங்கள் உண்ணாவிரதம் இருப்போம். வடமாகாண சபையையும், தமிழ் தேசிய கூட்டமைப்பையும் நம்பி நாங்கள் ஏமாந்து விட்டோம் என முதலமைச்சரிடமும் ஏனைய அமைச்சர்களிடமும் வாக்குவாதப்பட்டனர்..

இந்நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேறிச் சென்றிருக்கின்றனர்.

இதேவேளை இன்றைய தினம் காலை இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வாருங்கள் என முதலமைச்சர் விடுத்த அழைப்பையும் நிராகரித்துள்ளனர்.

protest_vikky_poe_001

protest_vikky_poe_002

protest_vikky_poe_003

protest_vikky_poe_004

protest_vikky_poe_005

protest_vikky_poe_006

தொடர்படைய செய்திகள்

நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கை – முதலமைச்சர் சி.வி

தூய நீருக்காக உண்ணாவிரதம் இருந்த இருவர் மயங்கி விழுந்தனர்

யாழ், ஊடகவியலாளர்களை கத்திமுனையில் அச்சுறுத்தி துரத்தியது பொலிஸாரா?

எண்ணெய் கசிவு விவகாரம்; 8 பேர் உண்ணாவிரதம்

திடீரென பூட்டப்பட்ட மாவட்டச் செயலகம்

தூய நீருக்காக திரண்டனர் மக்கள்: எழுத்துருவில் பதில் கிடைக்கும் வரை தொடரும் உண்ணாவிரதம்

நீரை மக்கள் குடிக்கலாமா? கூடாதா? – நாளை பேரணி

 

Related Posts