எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு – அரசாங்கம்

உலக சந்தையில் மசகு எண்ணெயை விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மக்களின் நலன் கருதி மிகக் குறைந்த அளவிலேயே விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 36 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள பின்னணியில், இலங்கையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் நிறுவனங்கள் இறக்குமதியை நிறுத்தும் அபாயம் மற்றும் உலக சந்தை நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் மாத்திரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகள் எரிபொருள் விலைகளை அதிகரித்ததோடு மாத்திரமின்றி வலுசக்தி பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் கூட முன்னெடுத்துள்ளன. பங்களாதேஷில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. சில நாடுகளில் 90 சதவீதம் வரை எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி 27ஆம் திகதி உலக சந்தையில் 72 டொலராகக் காணப்பட்ட மசகு எண்ணெய் விலை மார்ச் 8ஆம் திகதியன்று 108 டொலர் வரையும், 9ஆம் திகதி 119 டொலர் வரையும் உயர்வடைந்துள்ளது

Related Posts